பக்கம்:குழந்தை உலகம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ ᏮᏮ குழத்தை உலகம்

பாக்கு, சந்தனங் குங்குமமும் உண்டு. ' சத்திரத்திலே சாப்பாடு; வெற்றிலே பாக்குக் கடையிலே: சந்தனங் குங்குமம் கோவிலிலே.’-சுண்டெலி ராஜன் அரண்மனை யிலே சாப்பாடு சாப்பிட நமக்கு முடியுமா என்ன ?

கதையைப் பாட்டி சொல்கிருள்; கேளுங்கள்: சுண்டெலி ராஜனுக்குக் கல்யாணமாம் சோளத் தட்டைப் பல்லாக்கில் ஊர்கோலமாம் ஒரு எலி ஒடிப்போய் ஊருக்கெல்லாம் சொன்னதாம் ரெண்டெலி சேர்ந்துகொண்டு ரெத்னகம்பளம் விரிச்சுதாம் மூனெலி சேர்ந்துகொண்டு முகூர்த்தக்கால் நட்டதாம் நாலெலி சேர்ந்துகொண்டு நாகசுரம் வாசிச்சதாம் அஞ்செலி சேர்ந்துகொண்டு மஞ்சள் அரைச்சதாம் ஆறெலி சேர்ந்துகொண்டு கூறை உடுத்தித்தாம் ஏழெலி சேர்ந்துகொண்டு தாழம்பூச் சூட்டித்தாம் எட்டெலி சேர்ந்துகொண்டு கொட்டகை ஜோடித்ததாம் ஒன்பதெலி சேர்ந்துகொண்டு உல்லாஸ்மாய்ப் பாடித்தாம் பத்தெலி சேர்ந்துகொண்டு பல்லாக்குத் துக்கித்தாம் சுண்டெலி ராஜன் கல்யாணத்தில் வந்தவாளுக்குசத்திரத்தில் சாப்பாடு வெற்றிலைபாக்குக் கடையிலே சந்தனங் குங்குமம் கோவிலிலே சுண்டெலி ராஜனுக்குக் கல்யாணமாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/115&oldid=555232" இலிருந்து மீள்விக்கப்பட்டது