பக்கம்:குழந்தை உலகம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டெலி ராஜன் கல்யாணம் 105

கொள்ளுகிருர்கள். இவையெல்லாம் மனித உலகத்துக் கல்யாண நிகழ்ச்சி.

குழந்தைகளுக்குப் பிராணி யுலகத்துக் கதைகளில் மோகம் அதிகம். ஈசாப்புக் கதைகளும், பஞ்ச தந்திரக கதைகளும் பிராணி உலகத்தைத் தான் குழந்தைகளுக்குக் கர்ட்டுகின்றன. அந்தக் கதைகளிலே வரும் பாத்திரங்கள் மனிதர்களின் குணம் படைத்தனவாக இருந்தாலும் உரு வத்தில் விலங்குகளும் பறவைகளுமாகவே இருக்கின்றன. சிட்டுக் குருவி, காக்காய், காய், எலி முதலிய பிராணி களைப்பற்றிப் பாட்டி கதை சொல்ல ஆரம்பித்து விட்டால், குழந்தைகள் உத்ஸாகமாக அவளைச் சுற்றிக் கொண்டு வாயைத் திறந்தபடியே கேட்கத் தொடங்கி விடுகிரு.ர்கள். நடு நடுவே பாட்டி அபிநயங்களோடு கதையை விவரிக்கும்போது குழங்தைகளும் தம்மை அறியா மலே கதாபாத்திரங்களாக மாறி அபிநயம் பிடிப்பார்கள். கன்றக்குட்டி கதையில் துள்ளி ஓடும். கேட்கும் குழந்தை களும் துள்ளிக் குதிப்பார்கள். எலி சுவரை ப் பிருண்டும்: குழந்தைகளின் கைகள் பிருண்டுவதைப் போல நெளியும்.

பாட்டி சொல்லும் கதைகளில் சுண்டெலி ராஜன் கல்யாணம்’ ஒன்று. சுண்டெலி உலகத்திலே கல்யாண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ஊரில் உள்ளவர்களுக் கெல்லாம் அழைப்பு வருகிறது. பல்லாக்கு ஊர்வலம் கடக்கிறது. முகூர்த்தக்கால் நடுகிருர்கள். வருகிறவர் களைக் கம்பளம் விரித்து வரவேற்கிருர்கள். நாகசுரக் கச்சேரி கடக்கிறது. பெண்ணே அலங்கரிக்கிரு:ாகள். இப்படிச் சுண்டெலி ராணிக்கும் சுண்டெலி ராஜனுக் கும் கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளெல்லாம் சுண் டெலிகள் சேர்ந்துகொண்டே செய்கின்றன. அந்தக் கல்யாணத்தில் கமக்கும் சாப்பாடு உண்டு. வெற்றிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/114&oldid=555231" இலிருந்து மீள்விக்கப்பட்டது