பக்கம்:குழந்தை உலகம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 குழந்தை உலகம்

ஊர்வலம், மேளம், கச்சேரி, விருந்து முதலியவைகள் இருந்தால்தான் கல்யாணம் சிறக்கும். பிள்ளே பெண் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டால் போதுமா ? அது போதுமென்றிருந்தால் கல்யாணத்திற்காக இவ்வளவு தடபுடல் வேண்டியதே இல்லை. பெண்ணும் பிள்ளையும் என்ன செய்கிருர்கள், அவர்களுக்கு என்ன வேண்டும் என்ற கவலைக்கு இடமில்லை. சம்பந்திகளுக்கு உபசாரம் சரியாய் நடந்ததா என்ற கவலேதான் பேரிது. அதை விடச் சம்பந்திகளிள் சிநேகிதர்களைச் சரியானபடி கவனித் தார்களா என்பதிலே அதிகக் கவலை இருக்கவேண்டி யிருக்கிறது. சம்பந்தி வழக்கமாகப் பாதாகை வாங்கும் கடைக்கார முதலாளி தம் காரில் வந்திருப்பார். அந்தக் காரின் சாரதியும் உடன் வந்திருப்பான். முதலாளியைக் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் சாரதியைக் கவனித்து உபசாரம் செய்வதில் தவறக்கூடாது. இல்லா விட்டால் ராமாயணத்தில் கூனி வத்தி வைத்ததுபோல் அந்த டிரைவர் ஏதாவது எஜமானிடம் சொல்லுவான்; எஜமான் சம்பக்தியிடம் சொல்லுவார். சம்பந்திக்குக் கோபம் வந்துவிடும்!

ஆகவே, நண்பர்களே அழைப்பதிலும், வந்தவர்களே உபசரித்துச் சந்தோஷத்தோடு போய் வரும்படி அனுப்பு வதுந்தான் கல்யாணத்தை மணக்க வைக்கும் காரியங்கள்; கல்யாணச் செலவுகூட இந்த வகையில்தான் ஆகிறது. பாட்டுக் கச்சேரி, ஊர்வலமெல்லாம் யாருக்காக கூட்டம் கூடி மதிப்புரை சொல்லுகிருர்கள். அந்த கண்பர்கள் சமாஜத்தை உத்தேசித்தே.

பணக்காரர் வீடுகளில் எல்லாவற்றிற்கும் தனித் தனியே ஆட்களே நியமித்துக் கவனிக்கச் சொல்லுவார் கள். ஏழைகள் வீட்டில் உறவினர்களும் நண்பர்களும் தாங்களே முன் வந்து ஒவ்வொரு வேலையையும் ஏற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/113&oldid=555230" இலிருந்து மீள்விக்கப்பட்டது