பக்கம்:குழந்தை உலகம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. சுண்டெலி ராஜன் கல்யாணம்

ÉÉ வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண் ளிைப்பார் ' என்று தமிழர்கள் ஒரு பழமொழி சொல்லிக் கொள்கிரு.ர்கள். இரண்டு காரியமும் வர வர வளர்ந்து பெருகும். கினைத்த திட்டத்துக்குள் அடங்குவதில்லை யென்ற கருத்தை அந்தப் பழமொழியால் குறிப்பிடுகிருர் கள். விட்டைக் கட்டும் விஷயத்திலாவது, கொஞ்சங் கொஞ்சமாக வேலே செய்துகொண்டே போகலாம்: நடுவிலே வேலையை கிறுத்தி வைக்கலாம். மாசக் கணக் காய், வேலை கடந்து நிறைவேறின வீடுகளும் உண்டு,

கல்யாணம் அப்படி இல்லேயே குறிப்பிட்ட முகூர்த் தத்துக்கு முன்னலே செய்ய வேண்டிய வேலேகளே யெல் லாம் செய்தாக வேண்டும். எவ்வளவு சீக்கிரத்தில் முகூர்த்தம் வைக்கிருர்களோ, அவ்வளவுக்குப் பொறுப் பும் வேலைகளும் அதிகமாகத்தான் இருக்கும். - கல்யாண ஏற்பாடுகள் வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்றபடி வித்தியாசப்படும். கோடீஸ்வரன் வீட்டுக் கல்யாணத்துக்குக் கோடிப்பதென்ருல். அது ஒரு விதங் தான்; ஏழை வீட்டுக் கல்யாணம் என்ருல் அது வேறு விதந்தான். ஆனல் என்ன : கல்யாணம் என்ருல் எல் லோருமே பல நாட்களுக்கு முன்பிருந்தே ஏற்பாடு செய் கிருர்கள்; சுறுசுறுப்பாக கடமாடுகிருர்கள்: பல பேரு டன் பேசுகிரு.ர்கள். கல்யாணம் நிறைவேறினவுடன் தொண்டை கட்டிப் போகிறது; உடம்பில் ஒச்சல் உண்டாகிறது: கணக்கு வழக்கைப் பார்க்கிற போது தலே சுற்றுகிறது ! * , .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/112&oldid=555229" இலிருந்து மீள்விக்கப்பட்டது