பக்கம்:குழந்தை உலகம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 குழந்தை உலகம்

இப்படி மூள். பேரும் கூடியிருப்பதைப் பார்த்து ஒளுன் அங்கே வந்தது. அந்த மூன்றும் மூஞ்சியைத் தொங்கப்போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்து, ‘என்ன சமாசாரம்?' என்று கேட்டது. வண்டுக்குத் துக்கம் தாங்கவில்லை. அழுதுகொண்டே தான் பட்ட அவ மானத்தைச் சொல்லி முடித்தது. -

ஒனன், "அடி பைத்தியக்காரி, இதற்காக அழலாமா? அந்தக் கர்வம் பிடித்தவள் அப்படித்தான் சொல்லுவாள். அவள் என்னேயே லட்சியம் செய்யாதவள் ஆயிற்றே!” என்று கூறி மேலும் ஒரு பழைய செய்தியை எடுத்துச் சொல்லத் தொடங்கியது. -

"சொல்லுவள் சொல்லுவள் பொன் நங்கை அவள் சொல்லாள் என்று எண்ணவும் வேண்டாம் நான், பச்சைப் பல்லக்கின் மேலே ஏறியே பார் வேட்டைக்குப் போகும் பொழுது ‘ஓந்தி ஒரு குடம் தண்ணி கொண்டுவா’ என்று சொன்னவளே அவள்! "ஒணுன் தலைக்குச் சந்திர சாவித் தலைப்பாகை எதற்கு? என்று கேட்டவளே அவள். அவள் சொல்லுவள் சொல்லுவள் பொன் நங்கை!"

என்று அது தன் குறையை எடுத்துக் கூறியது.

தன் புருஷனுக்குக் கூட அவளிடம் கோபம் இருக்கி றது என்பதை உணர்ந்த வண்டுக்குக் கொஞ்சம் மனசு சமாதானம் ஆயிற்று. இனிமேல் அவளுக்கு இங்கே கெளரவம் கிடைக்காது' என்று எண்ணிக்கொண்டு சங் தோஷம் அடைந்தது.

(காடோடிக் கதைகளில் ஒன்று இது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/111&oldid=555228" இலிருந்து மீள்விக்கப்பட்டது