பக்கம்:குழந்தை உலகம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

குழந்தை உலகம்


நாம் தாலாட்டை இப்போது விழித்துக் கொண்டே அனுபவிக்கிறோம். குழந்தையைத் தாலாட்டும் தாய் பாட்டுப் பாடும்போது நாம் கேட்டு, “இது நீலாம்பரி” என்று சங்கீத அகராதி மூலமாக அதை அனுபவிக்கிறோம். தாய் சங்கீத உலகை மறந்து பாடுகிறாள்; குழந்தையோ எல்லாவற்றையும் மறந்து தூங்குகிறது.

என்ன அற்புதமான சக்தி அந்தப் பாட்டுக்கு! தமிழ்நாட்டில் பழங்காலத்தில் தாலாட்டுத் தெரியாத தாய் இருந்ததில்லை. குழந்தையைத் தூளியிலிட்டு ஆட்டும் போது அவர்கள் கை அசையும். நா அசையும். அதற்கென்று ஒரு விதமாக “லொள லொள லொள லொளாயி” என்று நாக்குப் புரளும். அப்படி நாவை அசைத்து ஆட்டிப் பாடுவதனால் அந்தப் பாட்டுக்குத் தாலாட்டு என்ற பெயர் வந்தது. தால் என்பதற்கு நாக்கு என்பது பொருள்.

தமிழ்த் தாய்மார்கள் அங்கங்கே பாடிவரும் தாலாட்டில் அருமையான கவிதைச் சுவை இருக்கும். அலங்காரங்கள் இருக்கும். குழந்தைகளே அவர்கள் எவ்வாறு உயிரினும் மேலாக நினைக்கிறார்கள் என்பது வெளிப்படும். தெய்வமாகவே வைத்துப் போற்றும் இயல்பும் தெரியவரும்.

தாங்கும் குழந்தை பாட்டைக் கேட்டு மெய்ம் மறந்து தூங்க, தூங்காமல் பாட்டிலே உள்ளத்தைச் செலுத்தும் பெரிய குழந்தைகள் அப்பாட்டின் பொருளே ஒருவாறு தெரிந்து கொள்ளும். அந்தப் பருவத்திலேயே இசை உணர்ச்சியும், தெய்வபக்தியும் உண்டாகும் படியாகப் பல பாடல்கள் அமைந்திருக்கும்.

தாலாட்டின் ஆரம்பம், “ஆராரோ, ஆரிரரோ” என்று வரும்.அதற்கே தத்துவார்த்தம் கூறுவார்கள்.“இவ்வுலகில் வினைப் பயனுக்கு ஈடாக மனிதர்கள் வந்து பிறக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/13&oldid=1047108" இலிருந்து மீள்விக்கப்பட்டது