பக்கம்:குழந்தை உலகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

குழந்தை உலகம்



மதுரையிலே குதிரைகட்டி
வாற புலவருக்குக்
குதிரையுடன் காளாஞ்சி
கொடுப்பார்கள் பெற்றகண்ணோ !
குதிரை விலைமதிக்கும்
குபேரனார் பெற்றகண்ணோ !
மாடு விலைமதிக்கும்
மகராசர் பெற்றகண்ணோ !
குதிரை விலைமதிக்கும்
கொற்றவனார் உங்களம்மான்
தங்கம் விலைமதிக்கும்
தாட்டியவான் உங்களம்மான்
பாட்டனார் எல்லேயிலே
பட்டுவந்து விக்குதென்று
பட்டு விலைமதிக்கப்
பத்துப்பெறும் உங்களம்மான்
முப்பாட்டான் எல்லையிலே
முத்துவந்து விக்குதென்று
முத்து விலைமதிக்க
முப்பதுபெறும் உங்களம்மான்.

அம்மான் பெருமை இதோடு நிற்கவில்லை. அவனுடைய பக்தியும் பாட்டுத் திறமும் வீரமும் பிற சிறப்புக்களும் புங்கானு புங்கமாகப் புறப்படுகின்றன.

குளங்கலங்க நீர்முழுகிக் கொடிபோல நாமமிட்டு
மலைகலங்கப் பாடிவரும் மன்னர் மருமகனோ !
அடிக்கரும்பை வெட்டி ஆனக்கே தீனிபோட்டு
நுனிக்கரும்பை வில்வளைக்கும் விசையர் மருமகனோ !
சாவ லடிக்குச் சமுதா டிடையிலிட்டுச்
சேவற்போர் எண்ணவரும் சமத்தர் மருமகனோ!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/27&oldid=1047208" இலிருந்து மீள்விக்கப்பட்டது