பக்கம்:குழந்தை உலகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



7. குழந்தை உலகப் பாடல்கள்

சின்னஞ் சிறு குழந்தைகளுக்குத் தாளம் போடுவதில் ஆசை; தாளத்துக்கு ஏற்பக் குதிப்பதில் ஆசை. பாட்டுப் பாடுவதைக் கேட்பதில் ஆசை. முடிந்தால் சேர்ந்து பாடுவதிலும் ஆசை.

பாட்டு அதற்கு முழுவதும் விளங்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால் முழுவதும் குழந்தை உலகத்துக்கே புரியாதபடியும் இருக்கக்கூடாது. அங்கும் இங்கும் குழந்தைக்கு விளங்கும் விஷயங்கள் இருந்தால் போதும். சிரிக்கும்படியான விஷயமானல் அதற்கு அதிக ஊக்கம் உண்டாகும்.

குழந்தை உலகப் பாட்டுக்கள் குழந்தையுள்ளத்தை உணர்ந்து அமைத்தவை. அந்தப் பாட்டுக்களுக்குப் பதவுரை, விசேஷ உரை என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. பல பாடல்களில் வெறும் சப்தம் மாத்திரம் இருக்கும். சிலவற்றில் பொருள் அடிக்கு அடி ஒட்டாமல் இருக்கும். ஆங்கிலத்தில் குழந்தைகள் பாடும் “அர்த்த மில்லாத பாடல்கள்” (Nonsense Rhyms) எதுகை நயம், தாளம் என்ற இரண்டு அழகோடு விளங்குவதைக் காணலாம். இந்த அமைப்புடைய தமிழ்ப் பாடல்கள் கணக்கு இல்லாதன உண்டு.

***

குழந்தைக்குக் காசு என்றால் தெரியும். அதைப்பைக்குள் போடுவதும் தெரியும். பெண் குழந்தையானால் துட்டினால் நகை செய்து அணியலாம் என்ற நினைவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/40&oldid=1047463" இலிருந்து மீள்விக்கப்பட்டது