பக்கம்:குழந்தை உலகம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

குழந்தை உலகம்



வெள்ளிக் கரண்டகம் சொல்லிக் கொடாதே
தாயைக் கொடு தம்மைக் கொடு
உற்றாரைப் பெற்றாரை ஊரைக் கொடு
குடுகுடு நாதா குளவிய நாதா
கொட்டையில் லாப்பழம் என்ன பழம்?
வாழைப் பழம்
வாழைப் பழத்துக்குத் தோலைக் கடி
வட்டில் கஞ்சிக்கு வாயைப் பிள
பிளபிள பிளபிள!

கண்கட்டி விளையாடல்

கட்டிலும் கட்டிலும் சேர்ந்ததோ?
சேர்ந்தது
காயாம்பூவும் பூத்ததோ ?
பூத்தது
வெட்டின கட்டையும் தளிர்த்ததோ ?
தளிர்த்தது
வேரில்லாக் கத்தரி காய்த்ததோ ?
காய்த்தது
கண்ண இறுக்குங்கோ
இறுக்கினேன்
ரோஜாப் பூவே ரோஜாப் பூவே
மெல்ல வந்து தள்ளிப் போ!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/65&oldid=1048431" இலிருந்து மீள்விக்கப்பட்டது