இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வேறு விளையாட்டுகள்
55
- சோளச் சோளக் காட்டிலே
- சோளம் அடிக்கிற வீட்டிலே
- பந்தடி யடி மீனாளே
- பதக்குச் சோளம் நான் தாரேன்.
- சின்னச் சின்ன மூக்குத்தி
- சின்னப்பன் இட்ட மூக்குத்தி
- அத்தை இட்ட மூக்குத்தி
- அரைப் பணத்து மூக்குத்தி.
- கல்யாண வாசலிலே
- கண்டெடுத்த மூக்குத்தி
- சீமந்த வாசலிலே
- தேடி எடுத்த மூக்குத்தி.
- சோளச் சோளக் காட்டிலே
ஒருவர் கையைத் தாமரை மலர் போல விரித்துப் பிடிக்க மற்றொருவர் கையில் குத்துவார். குத்தும் குழந்தை பிடிச்சுக்கோ என்று சொல்லும்போது மற்றக் குழந்தை கையைப் பற்றிக்கொள்ளும். குத்தும் குழந்தை “பிடிச்சுக்கோ” என்று சொல்வதைக் கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தால் பிடிக்க முடியும் ; இல்லா விட்டால் ஏமாந்துபோக வேண்டியதுதான். குத்தும் போது குழந்தை சொல்வது வருமாறு :
- அம்மா குத்து திம்மா குத்து
- பாட்டி குத்து பேரன் குந்து
- பிள்ளையார் குத்து பிடிச்சுக்கோ குத்து!
- மாது மாது மன்னவன் தம்பியைக்
- கோது கோது கொல்லத்து வெற்றிலை