பக்கம்:குழந்தை உலகம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

குழந்தை உலகம்



புளிய மரம் எங்கே?
வெட்டியாச்சு,
வெட்டின கட்டை எங்கே !
அடுப்பு எரிச்சாச்சு.
அடுப்பு எரிச்ச சாம்பல் எங்கே?
பல் தேச்சாச்சு.
பல் தேச்ச குளம் எங்கே?
புல் முளைத்துப் போச்சு.
புல் எங்கே?
ஆனையும் குதிரையும் மேஞ்சுடுத்து.
ஆனை எங்கே?
அரண்மனை வாசலில் கட்டியிருக்கு.
குதிரை எங்கே !
கோபுர வாசலில் கட்டியிருக்கு.
மானத்தைப்பார் மயிலாடுறது.
கால் வந்துடுத்து! கை வந்துடுத்து !

இப்படிச் சொல்லி எல்லாக் குழந்தைகளும் கைகளை எடுத்து விட்டுத் தட்டி ஆரவாரிப்பார்கள்.

இந்த விளையாட்டைத் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் விளையாடுகிறார்கள். சில இடங்களில் சில சிறிய வேறுபாடுகள் இருக்கும்.

மத்தாடுதல்

குழந்தைகளில் இருவர் எதிர் எதிரே நின்று தங்கள் கைகளை மாறுமாறாகப் பற்றிக்கொண்டு, பாதங்களே ஒன்றாகச் சேர்த்து வைத்து வட்டமிட்டுக் குதிப்பார்கள். ஒருவர் பாதங்களே மற்றொருவர் உதைந்திருப்பதனால் அவை சுற்றுவதற்குத் தக்க மைய ஸ்தானமாக இருக்கும். இப்படி மத்தாடும்போது பாடும் பாடல் வருமாறு :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/63&oldid=1048422" இலிருந்து மீள்விக்கப்பட்டது