பக்கம்:குழந்தை உலகம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சு விரல் பாட்டு 65

எந்தப் பிராணிக்கும் அமைய வில்லை. ஆகவே அவன்

நல்ல முயற்சிகளேச் செய்ய வேண்டியவன். -

★ கிகியில் ஐந்து விரல்கள் இருக்கின்றன. அவை தனித் தனியே சில காரியங்கள் செய்கின்றன. சேர்ந்து பல காரியங்கள் செய்கின்றன். இரண்டு விரல்கள் சேர்ந்தும் சில காரியங்கள் செய்கின்றன. பூத்தொடுக்கும் போது ஆள்காட்டி விரலும் பெரு விரலும் வேலே செய் கின்றன. - - . . .

இந்த ஐந்து விரல்களிலும் தலைமையானது இன்ன தென்று சொல்லவா வேண்டும் ? கட்டை விரல் என்றும், பெரு விரல் என்றும் பெயர் பெற்ற விரல் இல்லா விட்டால் கையில்ை எந்தக் காரியத்தையும் செய்ய முடி யாது. இறைவனேப் போல் அந்த விரல் மற்ற விரல்க ளோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது. பிரிந்து கிற்பது போலத் தோன்றிலுைம் வேலே செய்யும்போது முன்வந்து உதவி செய்கிறது. அதன் உதவி இல்லா விட்டால் மற்ற விரல்களுக்கு மகிமை இல்லை.

இந்த விரல்களேக் கொண்டே ஆத்ம பரமாத்ம தத்து வத்தை ஞானிகள் விளக்குகிருர்கள். தட்சினமூர்த்தி தம் கையில் சின்முத்திரையைக் காட்டுகிருர், பெரு விர லோடு ஆள்காட்டி விரலேச் சேர்த்து வைத்துக் காட்டும். அறிகுறிக்குச் சின் முத்திரை என்று பெயர். ஆளேக் காட்டும் ஆட்காட்டி விரல் இந்த முத்திரையில் ஆத்மா வைக் காட்டுகிறது. பெரு விரல் பரமாத்மாவைக் காட்டு கிறது. மற்ற மூன்று விரல்களும் மூன்று மலங்களைக் காட்டுகின்றன. ஆத்மாவானது மூன்று மலங்களையும் விட்டு இறைவைேடு ஒன்றுவதே முக்தி என்று இந்த முத்திரை காட்டுகிறது. “. . . . ..., -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/74&oldid=555191" இலிருந்து மீள்விக்கப்பட்டது