பக்கம்:குழந்தை உலகம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 குழந்தை உலகம்

ஆகிருன், அவன் பக்தனுக வேஷம் புனேந்தாலும் உண்மைப் பக்தன் ஆகமாட்டான். தோட்டக்காரன் ஒருவனே ஒரு செல்வர் வேலேக்கு வைத்திருக்கிருர். அவ னுக்கு வேண்டிய கருவிகளே வாங்கிக் கொடுத்திருக்கிரு.ர். சம்பளமும் தருகிரு.ர். அவன் என்ன செய்யவேண்டும் ? கருவிகளைக் கொண்டு ஒழுங்காக வேலே செய்யவேண்டும். அப்பொழுதுதான் எஜமானனுடைய அன்பைப் பெற முடியும். அப்படிச் செய்யாமல், எஜமானன் தோட்டத் துக்கு வரும்போது அவசைப் புகழ்ந்து பாடியும் வர வேற்பும் வாழ்த்தும் கூறியும் அவர் உள்ளத்தைக் கவர எண்ணுகிருன். எஜமானன் மகிழ்ச்சி அடைவாரா? " t ஏன்ன வேலே செய்தாய்? ஏன் அந்தச் செடிக்கு நீர் பாய்ச்சவில்லை?” என்றுதான் கேட்பார்.

இறைவன் கொடுத்த உடம்பையும் பொருள்களேயும் பெற்றுக் கொண்ட மனிதன் உழைக்க வேண்டும். அப் போதுதான் இறைவன் அருளைப் பெறலாம்.

உழைப்புக்காகவே உடம்பு ஏற்பட்டிருக்கிறது. உடம்பில் உள்ள உறுப்புக்களில் உணர்வுப் பொறிகள் அல்லது ஞானேந்திரியங்கள் ஐந்து உள்ளன: கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்ற ஐந்தும் ஐந்து வகை யில் பொருள்களின் இயல்பை உணர்கின்றன. இவற்றை யன்றிச் செயற் பொறிகள் அல்லது கர்மேந்திரியங்கள் ஐந்து இருக்கின்றன. அவை ஐந்தும் ஐந்து விதமான காரியங்களேச் செய்கின்றன. கால் கடக்கிறது: கை வேலை செய்கிறது; வாய் பேசுகிறது; ைேர ஒர் உறுப்பும் மலத்தை ஓர் உறுப்பும் வெளிப்படுத்துகின்றன. ஞானேங் திரியங்களில் தலைமையானது கண். கர்மேந்திரியங்களில் சிறந்தது. கை. கை நாம் செய்யும் முயற்சிக்கு அடை யாளம். மனிதனுக்குக் கை அமைந்தது போல வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/73&oldid=555190" இலிருந்து மீள்விக்கப்பட்டது