பக்கம்:குழந்தை உலகம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. அஞ்சு விரல் பாட்டு

மனிதன் முயற்சி செய்யாவிட்டால் கடைப் பிணம் ஆகிவிடுகிருன். அவன் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த இயக்கத்தில் ஒழுங்கு வேண்டும்; நல்ல லட்சியம் வேண்டும். இந்த இரண்டும் இருந்தால் நல்ல பயன் தானே உண்டாகும். காலத்தை வீணே போக்கும் மனிதன் மரத்துக்குக்கூடச் சமானமாக மாட்டான். மரம் வளர்கிறது: கழைக்கிறது; பூத்துக் காய்த்துக் கணிகிறது. கல்லைச் சொல்லலாமா ? கல்லுக்கு இயக்கம் இல்லை யென்பது உண்மை; ஆனால் அது திண்ணியதாக இருக் கிறது. மனிதன் அப்படி அல்லவேl இன்பத்தினுல் மகிழ்ந்தும் துன்பத்தினுல் சோர்ந்தும் போகிருனே! சோம்பேறி மனிதன் விஷயமோ இன்னும் மோசம். எந்த வகையான பாதுகாப்பும் இல்லாமல் இருக்கும் அவனுக் குச் சுகத்தை விடத் துக்கமே அதிகம். மிகச் சிறிய துக்கங் கூட அவனே உலுக்கி விடும். தாளாண்மையால் முறுக் கேருத உடம்பும் சிந்தனேயினால் உரமேருத உள்ளமும் படைத்த மகா பலவீனனை அவனுக்கு மிகச் சிறிய இடையூறும் மலேபோலப் படும். அப்போது அவன் நடுங்கு கிற நடுக்கத்தைப் பார்க்க வேண்டுமே செத்துப்போகிற வனுக்குக் கூட அவ்வளவு அவஸ்தை இராது. "கோழை நாளேக்கு நூறு தரம் சாகிருன்” என்று இங்கிலி ஷிலே ஒரு பழமொழி உண்டு. சோம்பேறியும் அந்தச் சாதி யைச் சேர்ந்தவனே. -

இறைவன் அளித்த உடம்பு இருக்கும்போது

முயற்சியின்றி இருப்பவன் இறைவனே அவமதித்தவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/72&oldid=555189" இலிருந்து மீள்விக்கப்பட்டது