பக்கம்:குழந்தை உலகம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சு விரல் பாட்டு 67

குழந்தையை விடப் பெரிய பிள்ளை என்ன செய்வான் ? ஏதாவது உருப்படியான யோசனை சொல்வான். இங்கே நடு விரல் யோசனை சொல்கிறது.

கடன் வாங்கித் தின்னலாம் என்று நடுவிரல் சொல்கிறதாம். கடன் வாங்கிளுல் சோறு தின்னலாம். பசி போய்விடும். ஆளுல் அப்போதைக் குப் பசி போனலும் கடன் தொல்ல வந்துவிடுமே. இதைப் பற்றிய யோசனே இன்னும் பெரிய பிள்களக்கு வருகிறது. ஆள்காட்டி விரல் இந்த யோசனையில் ஈடு படுகிறது.

கடன் எப்படிக் கட்டலாம்? என்ற கேள்வி அதன் அகக் கண்ணில் பிரம்மாண்ட மாக எழுகிறது.

எல்லாருக்கும் தலைமை பூண்டு, யாவருக்கும் உரிய குறைகளைப் போக்கும் குடும்பத் தலைவன் என்ன சொல் கிருன் : கடன் வாங்கினல் கட்ட வழி என்ன என்பது அவனுக்குத் தெரியும். உழைத்தால் கடனேக் கட்டிவிட லாம். பசியைப் போக்கிக்கொண்டு உற்சாகத்தோடு உழைத்தால் கடனேக் கட்டிவிடலாம். முயற்சி உடைய வர் கடனுக்குப் பயப்பட வேண்டியதில்லை. போதிய அளவு உணவு கிடைத்து உடம்பு நல்ல கிலேயில் இருக் தால், எத்தனே கடனாக இருந்தாலும் கட்டுவதற்குத் தியங்க வேண்டிய தில்லை. ஆகவே, -

பிழைத்திருந்தால் கட்டிக்கலாம் பிழைத்திருந்தால் கட்டிக்கலாம்

என்று ஒரு முறைக்கு இரு முறையாக அழுத்தங் திருத்தத்தோடு பெருவிரல் சொல்கிறது. சொல்கிறபடி செயலில் கிறைவேற்றிக் காட்டும் தகுதி உள்ளது. அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/76&oldid=555193" இலிருந்து மீள்விக்கப்பட்டது