பக்கம்:குழந்தை உலகம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ8 . குழந்தை -5త

மனிதனுடைய முயற்சி எப்படி ஆரம்பமாகிறது, எப்படி வளர்கிறது என்பதை இந்தப் பாட்டானது படிப் படியாகக் குறிப்பிக்கிறது. இயற்கையாகவே பசி உண்டாகிறது; அதை மனிதன் உணர்கிருன். அதோடு அவன் கின்றுவிட்டால், அவன் பசித்தபோது அழும் குழந்தையைப் போன்ற அபக்குவ கிலேயில் இருப்பவ கிைருன். பசியைத் தீர்க்க வழி என்ன என்று ஆராய் கிருன். பிறகு ஒரு வழியைக் கண்டுபிடிக்கிருன். அந்த வழியில் உள்ள இடையூறு அடுத்தபடி அவன் அறிவுக்குப் புலளுகிறது. அதனைப் போக்கவும் வழி அவனுக்கு இறுதியில் தோன்றுகிறது. உழைப்பில் உறுதியும், கம்பிக்கையும் உடையவன் காரியத்தைச் சாதித்துவிட லாம் என்பதைப் பெருவிரல் சொல்கிறது. பெரிய மனி தர்களும் அதையே சொல்கிருர்கன்.

உழைப்பின் உயர்வைத் தெரிவிக்கும் குறிப்பை யுடைய பாட்டைக் குழந்தைகள் கை விரல்களேத் தொட் டுக் காட்டிக்கொண்டே பாடுவார்கள்.

சோறு சோறு என்குதாம். (சுண்டு விரல்) சோற்றுக் கென்ன செய்யலாம் ? (மோதிர விரல்) கடன் வாங்கித் தின்னலாம் (நடு விரல்) கடன் எப்படிக் கட்டலாம்? (ஆள்காட்டி விரல்) பிழைத்திருந்தால் கட்டிக்கலாம் பிழைத்திருந்தால் கட்டிக்கலாம்! (பெரு விரல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/77&oldid=555194" இலிருந்து மீள்விக்கப்பட்டது