பக்கம்:குழந்தை உலகம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. ரீ ஜயந்திப் பாட்டு

க்ண்ணன் பிறந்தான். எவ்வளவோ காலத்துக்கு முன்னே அவன் பிறந்தான். சிறைக் கூடத்திலே கண் ணன் திருவவதாரம் செய்தபோது தேவகிக்கு முதலிலே மகிழ்ச்சி உண்டாகியிருக்க வேண்டும். ஆனல் உடனே அவளுக்குத் துக்கம் உண்டாகிவிட்டது. இந்த அழ குக் குழந்தையைக் கம்ஸன் கொன்றுவிடுவானே? என்று கினேத்தபோது அவள் குடல் குழம்பியது. இந்தக் குழந்தை இங்கு ஏன் பிறந்தது?’ என்ற கினேவு கூட உண் டாயிற்று. சில ஏழைகள் மிகவும் புத்திசாலிக் குழந்தை கள் கஷ்டப்படுவதைப் பார்த்து, 'இந்தப் பாவி வயிற் றிலே ஏன் பிறந்தாய் ?’ என்று கூறி வருந்துவதில்லையா ?

தாயினுடைய கவலையைத் தீர்க்கக் கண்ணனே வழி பண்ணிவிட்டான். வசுதேவன் சிறையினின்றும் விடுபட் டுக் கண்ணணேத் தூக்கிக் கொண்டு கந்தகோபன் ஊருக் குப் போய்க் குழந்தையை அங்கேயே விட்டு வந்தான்.

சிறையிலே பிறந்த கண்ணனுக்குக் கோகுலத்தில் விழா நடைபெற்றது. ஆய்மாதர் கூடிக் களித்துக் குதா கலித்தார்கள். இதைப் பெரியாழ்வார் மிக அழகாகத் தம்முடைய திருமொழியிலே பாடியிருக்கிருர். என் றைக்கோ பிறந்த கண்ணனை கினைந்து தம் மனத்திலே அவனுடைய பிறந்த காளைக் கற்பனை செய்து பார்த்து முதலில் தாம் மகிழ்ந்து, பிறகு எல்லோரும் மகிழும்படி யாகப் பாடினர். கண்ணன் மீண்டும் ஒரு முறை கவி யிலே பிறந்தான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/78&oldid=555195" இலிருந்து மீள்விக்கப்பட்டது