பக்கம்:குழந்தை உலகம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ ஜயந்திப் பாட்டு - zg

குழந்தைகளும் சிரத்தையாகக் கண் விழிக்க ஏற்பாடு செய்வார்கள். - -

பல குழந்தைகள் ஒன்று சேர்ந்துகொண்டு ஒரு பெரிய வீட்டில் இரவு கண் விழிக்க ஏற்பாடு செய்வார்கள். கண் ணன் படத்தை வைத்து அதற்கு அருகில் விடிய விடிய எரியும்படி விளக்குகள் வைப்பார்கள். அதற்கு எண் ணெய் வேண்டுமே; எல்லோரும் கூடிக்கொண்டு கால் யிலேயே ஊரில் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று எண் ணெய் கேட்பார்கள். அதற்குத் தனியாக ஒரு பாட்டு உண்டு. அந்தப் பாட்டில் எண்ணெய் வார்க்காவிட்டால் வீட்டில் இருப்பவரைக் குறை கூறும் பகுதிகள் இருக்கும்.

எண்ணெய் தொகுத்து வைத்துக்கொள்வதோடு ஒவ் வொரு குழந்தையும் தன் தன் வீட்டிலிருந்து பகடிணங் களைக் கொண்டு வரும். இந்தக் கூட்டுறவினல் அவர்க ளுக்கு உற்சாகம் மிகுதியாகும். ஒற்றுமை உணர்ச்சி நிலவும்.

இரவு கண் விழிப்பதற்குத் தாயக் கட்டம், பரமபத சோபான படம் முதலிய விளையாடல்களை ஆடுவார்கள். இரவு முழுவதும் விழித்து இருப்பதாகச் சங்கற்பம் செய்துகொண்டாலும் அவர்கள் இளங் குழந்தைகள் தாமே! கடைசியில் தூங்கிப் போவார்கள். -

சிறுவர் சிறுமியர்களுக்கும் கண்ணன் நிகணவு உண் டாக இத்தகைய முயற்சிகளே இக்த காட்டிலே காண் கிருேம். -

குழந்தைகள் புரீ ஜயந்தியன்று எண்ணெய் வாங்கச் செல்லும்போது பாடும் பாட்டு.வருமாறு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/80&oldid=555197" இலிருந்து மீள்விக்கப்பட்டது