பக்கம்:குழந்தை உலகம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொரியரிசியின் கத்ை S5

பொரியரிசி கிமிர்ந்து யானையை மேலும் கீழும் பார்த் தது. யானை சந்தோஷத்தால் தன் காதுகளே அசைத்தது. அந்தக்காதுகள் முறத்தைப்போல இருந்தன. "ஐயையோ! இதைக் கல்யாணம் பண்ணிக்கொண்டால் இந்த முறம் இரண்டும் நம்மைப் புடைத்துத் தள்ளிவிடுமே!’ என்று பொரியரிசிக்குப் பயம் உண்டாகிவிட்டது.

"ஊஹஅம். நான் மாட்டேன். உனக்குக் காது நன்ருயில்லே. மடங்கியிருக்கிறது” என்று சொல்லி வேக மாகப் போகத் தொடங்கியது. யானே அதை லட்சியம் செய்யாமல் போய்விட்டது.

டொரியரிசி நடந்து போய்க்கொண்டிருந்தது. எதிரே ஒரு குதிரை வந்தது. அதுவும் பொரியரிசியைப் பார்த்து, 'பொரியரிசி, பொரியரிசி, எங்கே புறப்பட்டாய்?'என்று. கேட்டது.

'கல்யாணம் செய்துகொள்ள எண்ணியிருக்கிறேன். அதற்காக ஒரு மாப்பிள்ளையைத் தேடி அலகிறேன்’ என் றது பொரியரிசி. .

'அப்படியா! என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள் ளேன். என்னுடைய கம்பீரமான நடை வேறு யாரிடம் இருக்கிறது?’ என்று சொல்லிக்கொண்டே காலு தடவை டக் டக்கென்று குறுக்கும் கெடுக்கும் நடந்து காட்டிற்று. அது கடக்கும்பொழுது பொரியரிசிக்கு உலக்கையின் ஞாபகம் வந்துவிட்டது. "ஐயோ! இதன் காலுக்கடி யில் நாம் அகப்பட்டுக்கொண்டால் கம்மைப் பொடியாக்கி விடுமே!’ என்று பயப்பட்டது. . . . . . . . . . . .

'ஊஹாம். அசங்கியமான பிராணி: குத்தம் தள்ளி” என்று சொல்லிவிட்டு ஒரே ஒட்டமாக ஓடிப் போய்விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/94&oldid=555211" இலிருந்து மீள்விக்கப்பட்டது