பக்கம்:குழந்தை உலகம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொரியரிசியின் கதை &?

அதைப் பார்த்த பொரியரிசி, "ஐயையோ! நான் உன் ஆனக் கல்யாணம் செய்துகொள்ளமாட்டேன். கால உதறி உதைக்கிருய்' என்று சொல்லிவிட்டு மேலே நடந்து போயிற்று.

கொஞ்ச தாரம் கடந்துபோன பிறகு, அதன் எதிரே சிட்டுக் குருவி ஒன்று தத்தித் தத்தி கடந்து வந்தது. பொரியரிசியைக் குருவி பார்த்து, “ சின்னஞ்சிறு பொரி யரிசி, சின்னப் பெண்ணே பொரியரிசி, காலை வீசி கடந்து போகும் காரியம் என்ன பொரியரிசி?” என்று கேட்டது. பொரியரிசி, "சிட்டுக் குருவி, சிட்டுக் குருவி, நான் கல் யாணம் பண்ணிக் கொள்கிறேன். மனசுக்கேற்ற மாப் பிள்ளையைத் தேடிக்கொண்டு போகிறேன்” என்றது.

சிட்டுக் குருவி கிளுக் கிளுக்கென்று சிரித்துக் கொண்டே, "வெள்ளே வெள்ளைப் பெண்ணரசி. வேடிக் கையான பொரியரிசி, என்னைக் கட்டிக் கொள்ளடி "ே என்று கேட்டது.

சேசே சின்னஞ்சிறு குருவி: உனக்கும் எனக் கும் ஈடு போதாது” என்று அலட்சியமாகச் சொல்லி விட்டுப் பொரியரிசி மேலே கடந்து சென்றது.

அப்போது அங்கே அழகான கொண்டை பள பளக்க வாலும் சிறகும் மினுமினுக்க ஒரு சேவற் கோழி ஒய்யார நடை போட்டு எதிரே வந்து கொண்டிருந்தது. தாரத்தில் அது வரும்போதே பொரியரிசி அதைப் பார்த் தது. "ஆஹா! என்ன அழகு! என்ன அழகு!" என்று பார்த்து ஆசைகொண்டது. அந்தக் கோழி பொரியரிசி யைப் பார்த்து, 'பொரியரிசிக்குட்டி, நீ புறப்பட்டது எங்கே?' என்று கேட்டது. பொரியரிசிக்கு வெட்கம் வந்துவிட்டது. உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டியது. கண்ணுளா, சிங்காரா, கல்யாணம் பண்ணிக்கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/96&oldid=555213" இலிருந்து மீள்விக்கப்பட்டது