பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

குழந்தை எப்படிப் பிறக்கிறது?

அப்பா:- ஆம், அம்மா! இந்தவிதமான இடையூறுகள் இருக்காமலிருப்பதற்காகவே செடிக்கும், மீனுக்கும் பறவைக்கும் முட்டையானது பாதி வயிற்றிலும் பாதி வெளியிலும் விளையும்படியாக அமைக்கப்பட்டிருப்பது போல மிருகத்துக்கும் மனிதனுக்கும் அமைக்கப்படவில்லை. மிருகத்துக்கும் மனிதனுக்கும் முட்டையானது முழுவதும் வயிற்றிலேயே விளைகின்றது.

பாப்பா:- அப்படியானால் ஏன் அப்பா அடிக்கடி ஆண் தாது பெண் தாதுடன் சேர்ந்து மிருகங்களுக்குக் குட்டிகளும், மனிதர்க்குக் குழந்தைகளும் உண்டாகவில்லை? அப்படியானால் நம்முடைய பசுவுக்கு எத்தனை கன்றுக் குட்டிகள் பிறக்கும், என்னுடைய பூனை எத்தனை குட்டிகள் போடும், அம்மாவுக்கு எத்தனை தங்கச்சிகள் பிறப்பார்கள்.

அப்பா:- ஆமாம் அம்மா! அப்படிக் கிடைக்கத்தான் செய்யும். ஆனல் ஆண் தாது பெண் தாது வயிற்றுக்குள் அது பெண் முட்டையுடன் சேர்ந்துவிடும் என்று நிச்சயம் சொல்வதற்கில்லை. அண்ணன் மாமரத்திலுள்ள மாங்காயைக் குறிபார்த்துக் கல்லை எறிகிறான். ஆனால் எறியும் பொழுதெல்லாம் மாங்காய் விழுகிறதா இல்லையே. சில வேளைகளில் தானே விழுகிறது. கல்லானது மாங்காய்க்கு நேராகச் சென்றால் மட்டுந்தானே மாங்காய் கீழே விழும். அதுபோல்தான் ஆண் தாதுவும் சில வேளைகளில்தான் பெண் முட்டைக்கு நேராகச் செல்கிறது, அப்பொழுதான் அத்துடன் சேர்கிறது அப்படிச் சேர்ந்து குட்டியோ குழந்தையோ உண்டாக ஆரம்பிக்கிறது. அப்படி நேராகச் செல்வதும் சேர்வதும் எப்போதும் நிகழ்வதில்லை. சில வேளைகளில்தான் நேரும். அடிக்கடி குழந்தைகள் உண்டாகாததற்கு அது ஒரு காரணம். ஆண் தாது பலமில்லாமல் இருக்கலாம், அதுபோலவே பெண் முட்டையும் சரியான வளர்ச்சி பெருமலிருக்கலாம். சில சமயங்களில் அம்மா அப்பா இருவரின் பழக்க வழங்கங்களும் அவைகளை ஒன்று சேரவிடாமற்ச் செய்யலாம். அது மட்டுமன்று ஆண் தாதுவும்