பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

குழந்தை எப்படிப்

தான் கர்ப்பம் தரிப்பது அல்லது சூல் கொள்வது என்று கூறுவார்கள்.

பாப்பா:- அப்புறம் அது என்ன செய்யும், அப்பா!

அப்பா:- அப்புறம் அது கொஞ்சம் கொஞ்சமாக வளரும்.

பாப்பா:- அப்பா! அது எப்படி வளரும், அதற்குப்பால் வேண்டாமா? ஜலம் வேண்டாமா? இப்பொழுது தங்கச்சிக்கு அம்மா பாலும் கொடுக்கிறாள், ஜலமும் கொடுக்கிறாள் அல்லவா?

அப்பா:- ஆம் அம்மா! பூவிலுள்ள முட்டைகள் விதைகளாக வளர்வதற்கும் பிறகு விதைகள் மண்ணில் முளைத்து வளர்வதற்கும் உரமும் ஜலமும் வேண்டும். அதேபோல் அம்மாவின் கர்ப்பப்பையிலுள்ள முட்டை வளர்வதற்கும் உணவும் வேண்டும், ஜலமும் வேண்டும். ஆனல் தங்கச்சிக்கு இப்பொழுது கொடுப்பது போல கர்ப்பப்பைக்குள் இருக்கும் பொழுது கொடுக்க முடியுமா?

பாப்பா:- ஆம் அப்பா! முடியாது. அப்படியானால் குழந்தை உள்ளே வளர்வது எப்படி?

அப்பா:- அம்மாவுக்கு பால் எப்படி வருகிறது தெரியுமா? அம்மாவுடைய ரத்தம்தான் பாலாக வருகிறது.

பாப்பா:- அது எப்படி அப்பா ரத்தம் சிவப்பாயிருக்கும். ஆனால் தங்கச்சி குடிக்கும் பால் வெள்ளேயாக அல்லவாயிருக்கிறது. அப்படியிருக்க ரத்தந்தான் பால் என்று எப்படிச் சொல்ல முடியும்?

அப்பா:- அம்மா! ரத்தம் சிவப்புத்தான், பால் வெள்ளைதான். ஆனாலும் ரத்தம் தான் பால். பசுமாட்டிவிருந்து கறக்கிருேமே அந்தப்பாலும் அதன் ரத்தம்தான். எப்படிச் சிவப்பு ரத்தம் வெள்ளைப்பால் ஆயிற்று என்பதும் ஒரு அற்புதம்தான்.