பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

குழந்தை எப்படி பிறக்கிறது

பொழுது தங்கள் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அறிவை வளர்த்துவர வேண்டும். நல்ல குணங்களை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.

பாப்பா :--அப்படிச் செய்தால்தான் நம்முடைய தங்கச்சி மாதிரி நல்ல குழந்தைகள் பிறக்கும் என்று சொன்னாய் அல்லவா? அப்பா! அப்படியேதான் நானும் அண்ணனும் நடப்போம். தங்கக்சியும் பெரியவளாகும் பொழுது அப்படியேதான் நடப்பாள் அப்பா!

அப்பா :--அதுதான் நல்லது அம்மா! அந்த மாதிரி நடந்துவந்தால் சிறுவர்கள் 16 வயதிலும், சிறுமிகள் 13 வயதிலும் குழந்தைகள் உண்டாகக் கூடிய பருவத்தை அடைகிறார்கள். ஆனால் நான் முன்னாலேயே சொன்னேன், ஞாபகமிருக்கிறதா, அம்மா!

பாப்பா :--அது என்ன அப்பா! நீ சொல்லு , நான் நினைத்துப்பார்க்கிறேன்.

அப்பா :--அம்மா! சிறுவர்கள் 16 வயதிலும், சிறுமிகள் 13 வயதிலும் பருவமடைந்த போதிலும் அவர்களுடைய தாதுக்கள் நல்ல முதிர்ச்சி அடையாமல்தான் இருக்கும், அதனால் அந்தத் தாதுக்கள் சேர்ந்து குழந்தை உண்டானால் அந்தக் குழந்தை அவ்வளவு பலமாகவும் அழகாகவும் இரா. ஆதலால் பருவமடைந்தாலும் நன்ருக முதிர்ச்சியடைவதற்காக இரண்டு மூன்று வருஷங்கள் காத்திருக்க வேண்டும்சொன்னேன்.ஞாபகமிருக்கிறதா, அம்மா!

பாப்பா:--ஆம், அப்பா! பழமானாலும் உண்ணக்கூடிய பக்குவம் அடைந்த பிறகுதான் உண்ண வேண்டும் என்றும், அதுபோல் நல்ல பக்குவம் அடைந்த பிறகுதான் குழந்தைகள் உண்டாக வேண்டும் என்றும் கூறினாயே அதுதானே அப்பா!

அப்பா:--ஆம், அம்மா! ஆனால் அதன்பிறகு கூட