இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5. காக்காய்
காக்காய்! காக்காய்! பறந்து வா ;
கண்ணுக்கு மை கொண்டு வா.
1
கோழீ ! கோழீ! கூவி வா;
குழந்தைக்கு பூக் கொண்டு வா.
2
வெள்ளைப் பசுவே ! விரைந்து வா ;
பிள்ளைக்குப் பால் கொண்டு வா.
3
6. கோழி
சேவற் கோழி
கோழீ ! கோழீ! வா வா;
கொக்கோ கோ என்று வா ;
கோழீ ! ஓடி வா வா ;
கொண்டைப் பூவைக் காட்டு வா.
1
குத்திச் சண்டை செய்யவோ?
குப்பை கிண்டி மேயவோ?
கத்திபோல் உன் கால்விரல்
கடவுள் தந்து விட்டனர்!
2
காலை கூவி எங்களைக்
கட்டில் விட்டெழுப்புவாய்;
வேலை செய்ய ஏவுவாய்;
வெற்றி கொண்ட கோழியே!
3