உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

குழந்தைச் செல்வம்

திருத்தமுறச் சுடரொளிதான் முகத்தில் வீசத்
      திரண்டுபுயல் பின்வர, மாலுமியும் நின்றான்;
கருத்தொடெதைப் பாடுவன்யான், களிப்பி லொன்றாய்க்
      கண்ணீரும் புன்னகையும் கலந்தது அம்மா! 3

உள்ளமதை ஆகாயம் பரவ விட்டேன்;
       உன்கரமும் என்கனவில் தீண்டப் பெற்றேன்;
மெள்ள உன்றன் முகமறைக்கும் திரையை நீக்கி,
       விழிகளையான் கண்டுதொழக் கருணை செய்வாய்!
கள்ளவிழும் வனத்திலெழும் இசையூ டெம்மைக்
       களிப்பொடு வரவேற்கும் குறிப்பைக் கண்டேன்;
வள்ளலுன்றன் திருக்கழலின் ஒளிஎன் னுள்ளம்
       மலியநிறைந் தானந்தம் அளிக்கு தையா! 4