உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


கதைப் பாட்டு

33. ஊகமுள்ள காகம்

தண்ணீர் கிடையாமல் - காகமொன்று
      தவித்த லைகையிலே,
மண்ணாற் செய்த ஒரு - சாடியினை
      வழியிற் கண்டதம்மா! 1

சாடியின் மீதிருந்து - தலையைச்
      சரித்து நோக்கிடவே,
சாடியிலே தூரில் - சற்றே
      தண்ணீர் தெரிந்ததம்மா! 2

காகம் உடன் எழுந்து - சிறு சிறு
      கற்கள் பொறுக்கிவந்து,
ஊகமாய்ச் சாடியினுள் - அவற்றை
      ஒவ்வொன்றாய் இட்டதம்மா! 3

இட்டிட வேநீரும் - மேலே
      எழுந்து வந்ததம்மா!
சட்டமாகக் குடித்துக் - காகம்
      தளர்ச்சி தீர்ந்ததம்மா! 4

ஊக்க முடையவர்க்குத் - துன்பம்
      உலகில் இல்லை. அம்மா!
ஆக்கம் பெருகும், அம்மா ! - இதைநீ
      அறிய வேண்டும்.அம்மா! 5

34. நெற்பானையும் எலியும்

பாட்டியின் வீட்டுப் பழம்பானை - அந்தப்
      பானை ஒருபுறம் ஓட்டையடா!
ஓட்டை வழியொரு சுண்டெலியும் - அதன்
      உள்ளே புகுந்துநெல் தின்றதடா! 1