கதைப் பாட்டு
41
அந்தமர மீதோர் - சிறுவன்
ஆநிரை மேய்க்க வந்தோன்.
சிந்தை மகிழ்ந்து நல்ல - கனிகள்
தின்று நிற்றல் கண்டாள்.
3
நாவறளு தப்பா! - நாலைந்து
நாவற் கனிபறித்து,
தாவென வேண்ட - அவனும்
தருவேன் என்று சொல்லி,
4
'சுட்ட கனிவேண்டுமோ? - அன்றிச்
கூடாத கனிவேண்டுமோ?
இட்டமுள்ள கனியைப் - பாட்டி நீ
இயம்பெ"னக் கேட்டான்.
5
கூறிய அம்மொழியால் - உள்ளம்
குழப்ப மெய்தி யப்பால்
தேறி அவளும், "அப்பா!-சுட்ட
தீங்கனிதா" என்றாள்.
6
மெத்தப் பழுத்துலைந்து - கறுத்து
வெடித்த கனியாக,
பத்துப் பதினைந்தை - ஒன்றாய்ப்
பறித்து மண்ணிலிட்டான்.
7
ஒட்டிய மண்நீங்கக் - கனியெடுத்
தூதி நிற்கையிலே.
"சுட்ட கனியிதெ"னச் - சிறுவன்
சொல்லி மறைந்திட்டான்.
8
மாடு மேய்ப்பவனும் - என்னை
மடக்கி விட்டான் என்று.
நாடு புகழும் ஒளவை - அன்று
நாணித் தலைகுனிந்தாள்.
9