பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தங்தை தாய் தந்தது

13

இருக்கும். பூரித்த அண்டம் இரண்டிரண்டாகப் பிரிந்து பெருகுமென முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அப்படிப் பெருகும்போது ஒவ்வொரு பிரிவிலும் 24 ஜோடிக் கணுக்கோல்கள் இருக்கும்படியாக அவையும் இரட்டித்துப் பெருகும்.

பூரித்த அண்டம் பெருகிக் குழந்தையாக வடிவெடுப்பதை விட்டுவிட்டுக் கணுக்கோல் ஒவ்வொன்றையும் இன்னும் நுட்பமாகத் துருவிப் பார்ப்போம். மிக மிகச் சக்திவாய்ந்த பூதக் கண்ணாடியால் ஆராய்ந்தால் கணுக்கோல்களிலே ஆயிரக்கணக்கான மிக நுட்பமான பாகங்கள் இருப்பதைக் காணலாம். அந்தப் பாகங்களின் திரளே கணுக்கோல். அவைகளுக்கு ஜீனுக்கள் (Genes) என்று பெயர். நமது ஆராய்ச்சி நுட்பமாகப் போய்க் கொண்டேயிருக்கிறதல்லவா? பூரித்த அண்டத்திலே தொடங்கினோம். அதிலிருந்து விந்தணுவிற்கும் அண்டத்திற்கும் வந்து, அவற்றிலிருந்து கனுக்கோல்களுக்கு மாறி, அதிலிருந்து இப்பொழுது ஜீனுக்கு வந்திருக்கிறோம்.

இந்த ஜீனுவிலேதான் ஒவ்வொரு தன்மைக்குமான இரகசியம் ஒளிந்து கொண்டிருக்கிறதாம். ஏதாவது ஒரு தன்மைக்கென ஒரு ஜீனு இருக்கலாம், அல்லது பல அணுக்கள் இருக்கலாம். அவைகள் பல்வேறுவிதமாகக் கூடிப் பிரிந்து குழந்தையின் பாரம்பரியத்தை நிர்ணயம் செய்கின்றன.

குழந்தையாக மாறும் பூரித்த அண்டத்திலுள்ள கனுக்கோல்களில் ஜோடிக்கு ஒன்றாக 24 கணுக்கோல்கள் தந்தையிடத்திலிருந்து வந்ததென்றும், மற்ற 24 தாயிடத்திலிருந்து கிடைத்தவையென்றும் முன்பே அறிவோம். அந்தப் பூரித்த அண்டம் பிரியும்போது ஏற்படும் உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும் இதுபோன்ற 24 ஜோடிக் கணுக்கோல்களே இருக்கும். அதாவது ஒவ்வொரு ஜோடி-