பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
20
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்


சாப்பிட்டே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்த அல்ல. குழந்தையை அப்படி முற்றிலும் ஒரு கால கியதிக்கு அடிமையாக்கிவிடக்கூடாது. இன்று வயிறு ஒரு மாதிரி யாக இருந்தால் அதற்கேற்றவாறு காலத்தையோ, உணவின் அளவையோ மாற்றத்தான் வேண்டும். இம் மாதிரி சந்தர்ப்பங்களில் கால அட்டவணையை விடத் தாயின் இயல்புணர்ச்சியே தகுந்த வழிகாட்டியாகும். பொதுவாக மேலே சொன்ன பழக்கங்களை இளமை யிலேயே உண்டாக்குதல் நல்லதென்பதை மனத்தில் வைத்துக்கொண்டு குழந்தையின் உடல் கிலே மன கிலேகளே யும் அனுசரித்து கடக்கவேண்டும். இனி உள்ள வளர்ச்சியைப் பற்றிச் சிறிது கவனிப் போம். உடல் வளர்ச்சியையும், உள்ள வளர்ச்சியையும் தனித்தனி சம்பந்தமில்லாதவையாகக் கருதக்கூடாது. இரண்டிற்கும் சம்பந்தமிருக்கிறது. உடல்கிலே உள்ளத் தையும், உள்ள கிலேமை உடலையும் பாதிக்கின்றன. ஆனல் செளகரியத்திற்காக உள்ளத்தைத் தனியாகப் பிரித்து கோக்கும்போது, அதன் வளர்ச்சியைச் சில விஷயங்கள் முக்கியமாகப் பாதிக்கின்றன என்பது தெரிகின்றது. பெற்ருேர்களின் வாழ்க்கைக்கும் குழந்தையின் உள்ள வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. வீடு குழந்தையின் உலகம். அங்குதான் அது வாழ்க் கைக்கு வேண்டிய பாடங்களே முதலில் கற்றுக் கொள் கிறது. அதன் உடலும் உள்ளமும் வளர்ச்சியடைகின்றன: அதன் உணர்ச்சி, தன்மையெல்லாம் மலர்கின்றன. ஆதலால் குழங்தையின் பூரண வளர்ச்சிக்கு வீடு ஆதி காரணமாகின்றது. அதாவது பெற்ருேரையும், அவர் களுடைய வாழ்க்கையையுமே குழந்தையின் வளர்ச்சி முக்கியமான அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. பெற்ருேர் தமது வாழ்க்கையையும், குழந்தையிடம் கடந்து