பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
21
வளர விடுக


கொள்ளும் வகையையும் சரியானபடி அமைத்துக் கொள் வது அவசியமாகும். குழந்தையிடம் பெற்ருேர்கள் அன்பு செலுத்துகிருர் கள். குழந்தையின் வளர்ச்சிக்கு அன்பு பிரதானம் என் ருலும் அதிலும் ஒரு வரையறை இருக்க வேண்டும். கண் மூடித்தனமாகக் காண்பிக்கும் அதிக அன்பினாலும், பாது காப்பினலும் குழந்தையின் சுய நம்பிக்கை, சுய முயற்சி முதலிய தன்மைகள் வளராமல் போகின்றன; குழந்தை வயது வந்த காலத்திலும் எதற்கும் பிறரை எதிர்பார்த்து கிற்கவே முயல்கின்றது: உலகத்தில் எல்லோரும் பெற்ருே ரைப்போல அன்போடும் ஆதரவோடும் இருப்பார்களென எண்ணி ஏமாற்றமடைகின்றது. அதே சமயத்தில் அன்பு குறைவாக உள்ள இடத் திலும் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது. சில பெற்ருேர்களுக்கு இயல்பாக அன்பிருந்தாலும் அதைக் குழந்தைக்கு ஓரளவுகூடக் காண்பிக்கக்கூடாது என்று எண்ணிக் குழந்தையிடம் கண்டிப்பாக கடந்து கொள்வார் கள். அப்படி நடப்பதுதான் குழந்தையைச் சரியான முறையில் வளர்ப்பதாகும் என்பது அவர்கள் கினைப்பு. மேலும் வாழ்க்கையில் குழந்தை சிறந்து விளங்கவேண்டும் என்ற ஆசையால் அதனிடம் காணப்படும் குறைகளையே எடுத்துக் காட்டுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பு நோக்கி அதைத் தாழ்த்திப் பேசுவதும், குற்றத்திற்காகக் கடுமையான தண்டனை விதிப்பதும் ஒரு சிலருடைய பழக்க மாக இருக்கின்றன. இவையெல்லாம் குழந்தைக்குப் பாதக மாகவே முடியும். ஆதலால் பெற்ருேர்கள் தமது கடத்தையை நன்கு ஆராய்ந்து, குழந்தையிடம் அளவாக அன்பு செலுத்த முயல வேண்டும். குழந்தை எதற்கெடுத்தாலும் தம்மையே எதிர்பார்த்திருப்பதைக் கண்டு பெற்ருேருக்குத் தம்மை