பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

1. எனது நோக்கம்

பூங் குழந்தை! அது நமக்கு எத்தனை இன்பங் கொடுக்கிறது! எத்தனை இன்பக் கனவுகளையெல்லாம் காணும்படி செய்கிறது! அதன் உச்சிதனை முகர்ந்தால் உள்ளம் குளிர்கின்றது. அதன் சிரிப்பிலே, உடல் நெளிவிலே, மழலையிலே அமுதூறுகின்றது.

இந்தப் பூங்குழந்தை உடலிலும் உள்ளத் திறமைகளி லும் நன்கு வளர்ந்து உலகத்திலே புகழோடு வாழ வேண்டாமா? அதற்கு வேண்டிய முயற்சிகளைப் பெற்றோர்களும், குழந்தையைப் பேணுகின்ற மற்றவர்களும் தளர் வின்றி எடுத்துக்கொள்ள வேண்டாமா?

பெற்றோர்களுக்கு, சிறப்பாகத் தாய்க்குக் குழந்தையை நன்கு வளர்ப்பதற்கு வேண்டிய உணர்ச்சிகள் ஓரளவிற்கு இயல்பாகவே அமைகின்றன. தாய்மையோடு இந்த உணர்ச்சிகளும் மலர்ச்சியடைகின்றன. இருந்தாலும் தனது இயல்பான உணர்ச்சிகளோடு வழுவற்ற கல்வி-