பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்


யாலும் கேள்வியாலும் பெறும் அறிவையுங் கொண்டு குழந்தையை வளர்த்தால் மிகவும் சிறப்பாக இருக்கு மல்லவா? குழந்தையின் உடல் கலம் செம்மையாக இருப்பதற்குக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. இயற்கை உபாதைகளேத் தவிர்ப்பதிலும், கல்ல பழக்கங்களே அது சரிக்கச் செய்வதிலும், ஏற்ற உணவை அளிப்பதிலும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் பல இருக் கின்றன. இவ்வாறே குழந்தையின் உள்ள வளர்ச்சியிலும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் பல உள்ளன. இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதால் இயல்பாகவே குழந்தையை வளர்ப்பதற்குள்ள உணர்ச்சி இன்னும் கன்கு விரிவடையும். அதனல் பெற்ருேர்கள் குழந்தையை மேலும் சிறந்த முறையில் வளர்க்கலாம். சில சமயங்களிலே குழந்தை பிடிவாதம் பண்ணு கிறது; ஓயாது அழுது தரையிலே விழுந்து புரளுகிறது; பொய் சொல்லுகிறது. இப்படி காம் விரும்பாத ஏதாவ தொன்றைச் செய்கிறது. தாய்க்குப் பெரிய சோதனையாக அது முடிகிறது. என்ன செய்வதென்று அவளுக்குப் புரி கிறதில்லை. வீட்டில் அநுபவம் வாய்ந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் குழந்தையைத் திருத்த ஏதாவது உபாயம் கூறுவார்கள். பாட்டியம்மாள் இருந்தால் அவ ளுடைய யோசனை நிச்சயம் கிடைக்கும். குழந்தையின் உள்ளப் போக்கை ஆராய்ந்தறிந்த மனத் தத்துவர்கள் தங்களுடைய யோசனைகளையும் கூறியிருக்கிருர்கள். இவற்றையெல்லாம் குழந்தையை கல்ல முறையில் வளர்க்க ஆசைப்படும் தாயும் தங்தையும் அறிந்திருக்க வேண்டும். ஈன்று புரந்தருதல் என் தலைக்கடனே' என்று தமிழ்த் தாய் ஒருத்தி தனது தலைமையான கடமையைப் பற்றிக் கூறியிருக்கிருள். குழந்தையைப் பெறுவது மட்டும்