பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எண்ணித் துணியும் பேராற்றல் 4 I சொந்த எண்ணங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் மரி யாதை கொடுத்துச் சிறுவர்களே வளர்த்தால் அவர்கள் பிற் காலத்திலே கண்மூடித்தனமாக எதையும் கம்பிக்கொண்டு காரியம் செய்யாமலிருப்பார்கள். கவி ரவீந்திரகாத தாகூர் சொல்லுகிருர்-சிந்தணு சக்தியானது பழைய மூடப் பழக்க வழக்கங்கள் என்னும் பாலேவனத்திலே மறைந்துவிடாது மேலோங்கி நிற்கும் உலகம் வேண்டும் என்று. பரம்பரைப் பழக்கங்கள் நல்லதானுலும் சரி, கெட்டதானலும் சரி நம்மை இறுகப் பிடித்துக் கொள்கின்றன. அவற்றை யெல்லாம் நமது அறிவைக் கொண்டு அலசிப் பார்த்துப் பயனுள்ளவைகளை வைத்துக் கொண்டு மற்றவைகளைக் களைக்தெறியும் துணிவு நமக்கு உண்டாக வேண்டும். அவ்வாறுண்டாக வேண்டுமானுல் சுயேச்சையாக எண்ணிப் பார்க்கும் பயிற்சி சிறு வயது முதற்கொண்டே போற்றி ஆதரிக்கப்படவேண்டும். மேலும் வாழ்க்கையிலே மனிதனுக்குப் பல பிரச்னே கள் உண்டாகின்றன; பல நெருக்கடிகள் ஏற்படுகின்றன. அப்பொழுதெல்லாம் அவன் தாகைக் காரியம் செய்ய வேண்டும். அவனுடைய ஆலோசனையைப் பொறுத்துத் தான் அவனுக்கு வாழ்க்கையில் வெற்றியோ தோல்வியோ இருக்கின்றது. பெரியவனுனவுடன் திடீரென்று இந்த ஆலோசனைத் திறமையும், தனது ஆலோசனையிலே நம்பிக் கையும் உண்டாகிவிடுமா ? முடியாது. சிறு வயதிலிருந்தே அந்தச் சக்தி தடங்கலில்லாது மலர்ந்து வரவேண்டும் என்பது இதலுைம் விளங்குகிறதல்லவா? இன்று உலகத்திலே பெரும்பாலான மக்கள் சொந்த மாகத் தாங்களே ஒரு விஷயத்தைப் பற்றி எண்ணமிட்டு முடிவுக்கு வர நினைப்பதில்லை. வேறு யாராவது ஒருவர் அதைப் பற்றிச் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருக்கின்ருர்கள். ஏனென்ருல் சிந்தனே