பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
50
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்


கால இந்தியாவில் வாழப்போகிற மக்களே இப்படிப் பய முறுத்திக் கோழைகளாக்குவது நியாயமா என்ற கேள்வி என் மனத்திலே வெடித்தெழுந்தது. சின்னக் குழந்தைகளுக்கு எதைக் கண்டாலும் ஆச்சரி யம். எதையும் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மட்டில்லாத ஆசை. அந்த ஆசை போற்றத் தகுந் தது. புதிது புதிதாக எல்லாவற்றையும் பார்த்து அந்த அநுபவத்தால் குழந்தைகள் தங்கள் அறிவை விருத்தி செய்து கொள்ளுகின்றன. அந்த ஆசையை இப்படி நசுக்கி விடுவது நல்லதா என்று கான் யோசித்தேன். அது மட்டு மல்ல. இம்மாதிரி பயப்படுத்தி வைத்தால் அவன் பெரியவ னைபொழுது வாழ்க்கையில் நேரிடுகின்ற கஷ்டங்களைச் சமாளிக்க எப்படித் தைரியமடையப் போகிருன்? எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும் என்ற மனே திடம் எப்படி உண்டாகப் போகிறது? புதிய மனிதர்களேக் காட்டி அவர் களே ராட்சசர்கள் என்று எண்ணும்படி செய்தால் அவன் எவ்வாறு பின்னல் சமூகத்தில் மற்றவர்களோடு சமமாக இருந்து பழகப்போகிருன்? இம்மாதிரி கேள்விகள் என் மனதில் தொடர்ந்து தோன்றின. இப்படிக் கூறுவதால் குழந்தைகளுக்கு ஏதாவது திங்கு நேரிட்டாலும் சரியென்று அவற்றின் இஷ்டப்படி யெல்லாம் விட்டுவிடலாம் என்று நான் சொல்லுவதாக கினைக்கக் கூடாது. இளங்கன்று பயமறியாது என்பது வாஸ்தவந்தான். ஆனல் குழ்ந்தைக்குப் பயத்தை உண்டாக் காமலேயே இம்மாதிரி சக்தர்ப்பங்களில் சமாளித்துவிட முடியும் என்பது எனது கட்சி. நாம் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும். ரெயில் ஜன்னல் வழியாகக் குழந்தை பார்க்க விரும்பில்ை அதைத் தடுக்க வேண்டிய தில்லை. குழந்தையைப் பார்க்கும்படி விட்டுவிட்டுப் பின் புறம் மெதுவாகப் பிடித்துக்கொள்ளலாம். குழந்தைக்காக நாம் கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும்.