பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
63
ஒரே குழந்தை


அது எதற்கெடுத்தாலும் பிறரை எதிர்பார்க்கவே எண் னம் கொள்கிறது; தானே. அதைச் செய்து கொள்ளலாம் என்ற கம்பிக்கை அதற்கு ஏற்படுவதில்லை. ஆதலால், மற்றக் குழந்தைகளோடு பழகுவதற்கு அதற்கு வசதி செய்து கொடுக்கவேண்டும். குழந்தைப் பள்ளிகள் இதற்குச் சிறந்த சாதனங்கள். அங்கே பெற் ருேர்களின் அர்த்தமற்ற அன்பும் செல்லமும் கவனமும் இல்லை. பிற குழந்தைகளின் சேர்க்கை நிறைய உண்டு. அவர்களோடு பல மணி கேரம் இருப்பதால் கூடிக் காரியம் செய்யவும், விளையாடவும், பிறரை அதுசரித்து கடக்கவும் அக்குழந்தை கற்றுக் கொள்ளும். உலகமானது தனது வீட்டைப் போலவே தன் விருப்பப்படி இருக்கா தென்ற உணர்ச்சியும் மெதுவாக உண்டாகும். எதிர் வீட்டிலே ஒரு பையன் இருக்கிருன். ஒரே பையன். அவனுக்கு ஏதாவது வேண்டு மென்ருல் அம்மாளைக் கூப்பிடத்தான் தெரியும்; அம்மாள் வரக் கொஞ்சம் தாமத மேற்பட்டாலும் உடனே அழத்தான் தெரியும். அவனுக்கு வேண்டிய தெல்லாவற்றையும் அவ னுடைய தாயே செய்துவிடுகிருள். அவன் ஒடக்கூடாது; ஒடினல் விழுந்து காயமாகிவிடுமே! ஒவ்வொரு வேளையும் அவனைச் சாப்பிடும்படி செய்வது ஒரு பெரிய பிரயத்தனம். சரியானபடி உணவருக்தாது உடம்பு இளேத்துவிடுகிறதே என்று தாய்க்குப் பெரிய கவலை. அதை அவன் தெரிந்து கொண்டிருக்கிருன். வாழ்க்கையிலே இப்படி யெல்லாம் யார் இவனிடம் அக்கறையும், அதுதாபமும் கொள்ளப் போகிருர்கள்? வாழ்க்கை யென்பது உறுதியோடும், தன்னம்பிக்கை யோடும் போராடுபவனுக்கே வெற்றி கொடுக்கும். இவன் பிறரையே எதற்கும் எதிர்பார்த்து நிற்பான். தனக்கு