பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்


வேருகப் பிரிந்திருப்பவை அல்ல. ஒரே உள்ளத்தின் இரண்டு அம்சங்கள். இருந்தாலும் இந்த மறைந்துள்ள பகுதி மிகவும் பொல்லாததாம். அது வெளி மனத்தைக்கூட ஆட்டி வைத்துவிடுமாம். அதில் எத்தனையோ ஆசைகள், விருப்பு வெறுப்பு முதலியவைகள் மறைந்து அழுந்திக் கிடக்கின்றனவாம். அவற்றைப் பற்றியெல்லாம் மனப் பகுப்பியலார் என்ற அறிஞர்கள் ஆராய்ந்து கூறியிருக் கிருர்கள். (மனத்தைப் பற்றியும் மறை மனத்தைப் பற்றி யும் மனமெனும் மாயக் குரங்கு என்னும் அடுத்து வரும் நூலில் விரிவாக எழுதுவேன்.) மனப் பகுப்பியலார் கண்டறிந்து கூறியவற்ருல் குழந்தை வளர்ப்பு முறையைப் பற்றிய கருத்துக்களில் பல முக்கிய மாறுதல்கள் ஏற்பட்டிருக் கின்றன. மனப் பகுப்பு முறையை முதலில் நன்கு உரு வாக்கி நிலைபெறச் செய்தவர் பிராய்டு (Freud) என்ற அறிஞர் ஆவார். அவருக்குப் பின்னல் இன்னும் பல மன்ப் பகுப்பியலார் இதைப் பல வழிகளில் அபிவிருத்தி செய்திருக்கிருர்கள். அவர்களுடைய ஆராய்ச்சியின் பய கைப் பொதுவாக மனத் தத்துவத்தைப் பற்றிய பல கொள்கைகள் மாற்றமடைந்திருப்பதோடு குழங்தை வளர்ப்பைப் பற்றிய எண்ணங்களிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த உண்மைகளை யெல்லாம் அறிந்துகொள்ள வேண்டியது குழந்தைகளே நல்ல முறையில் வளர்க்க விரும்பும் ஒவ்வொருவருடைய கடமையுமாகும். தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் கூடியவரையில் எளிய முறையில் இவற்றைப் பற்றிய அடிப்படையான சில முக்கியக் கருத்துக்களே விளக்க முயலுவேன். குழந்தை LD☾ மலர்ச்சியைப் பற்றி கான் கவனித்துக் குறித்து வைத்துள்ள சம்பவங்களுடன் பிணத்துக் கூடியவரை யில் படிப்பதற்குச் சுவையோ டிருக்கும்படியாகவும்