பக்கம்:குவலயானந்தம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழில் அணி இலக்கணம் (268) பல்வகைத் தாதுவின் உயிர்க்கு உடல் போல் பல சொல்லால் பொருட்கு இடன் ஆக உணர்வீனின் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் எனும் நன்னூலார் வாக்கால் செய்யுளில் அணியின் இன்றிய மையாமை புலப்படும். மிக எளிய சொற்களால் பல அரிய பொருள்களை உணர்த்தி இனிய நயங்களைத் தருகிறான் புலவன். சொற்கள் அவ்வாற்றல்கனைப் பெறுவதற்கும் புலவன் அதனை உணர்த்துவதற்கும் பெரிதும் பயன்படுபவற்றுள் முதலிடம் பெறு வது அணி. சுவிஞன் இத்தகைச் சிறப்புடை அணியினைப் புதுப்புது வடிவங்களில் கையாண்டு தனது எண்ணங்களில் அகலத்தையும் ஆழத்தையும் ஏற்படுத்தித் தன் புலமையைப் பறைசாற்று கிறான். கற்பாரைக் கவர்ந்து கொள்கிறான்.'உயர் கவிதைகளிலே உவமை உருவகங்கள் வெறும் உத்திகள் அல்ல அவையே அடிப் படைகளும் ஆகி விடுகின்றன.*" என்பது சாலப் பொருந்தும். தமிழ் இலக்கியப் பரப்பில் புகுந்தால் இளங்கோ, கம்பன் மட்டு மின்றி, சங்கம் தொட்டுஇன்றுவரைபலர் இச்சிறப்புடையோராய்த் தென்படுவர், நீதி இலக்கியமான திருக்குறளிலும் கூட இவ்வணி கள் தித்திக்கும் தேனாய் மிகச் சுவைபட அமைந்துள்ளன. இலக்கியக் கலைத்துறையில் படைப்பாளர் கையாளும் கலை நுணுக்கத் திறன்களுள் மிகப் பழமையானதும் கவிஞரின் வெளி வீட்டு முறைக்கு ஒனியும் தெளிவும் சேர்ப்பதும் பயில்வாரின் நெஞ்சங்களை எளிதில் ஈர்ப்பதும் கவிஞன் கண்டகாட்சியை மற்றவர் அவனது கற்பனை எல்லைக்குள் மிக நெருங்கிச் 1. கவிதை நயம், டாக்டர், க.கைலாசபதி, இ.முருகையன், பக் 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குவலயானந்தம்.pdf/6&oldid=1498494" இலிருந்து மீள்விக்கப்பட்டது