பக்கம்:குவலயானந்தம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குவலயானந்தம்..... சென்று உள்ளபடி கண்டு கொள்ளத் துணைக் கலைக்கருவி வாய் இருப்பதும் உவமை அணி ஆகும்' என்பர் டாக்டர் மு. வரதராசனார். இக்கூற்று உவமைக்கு மற்றுமன்று உருவகம், தன்மை தற்குறிப்பேற்றம் துட்பம், சுவை போன்ற பல அணி களுக்கும் சாலப் பொருந்தும். எழுத்துக்கு அணிசொல்லே இன்சொற்கு அணி தான் வழுத்தும் பொருளின் வளமே அழுத்தும் பொருளுக்கு அணி யாப்பே போதம் உயர் யாப்பிற்கு அருளும் அணியே அணி (48) எனும் செகவீர பாண்டியனாரின் கருத்தும் இங்குச் சுட்டத் தக்கது. அழகு என்று பொருள்படும் அணி இயற்கையாக அமைந்த அழகையே குறிக்கும். காலையில் காணும் கதிரவன் கவினும் மாலையில் மதியை மயக்கும் மதியின் அழகும் வானத்தில் இயற் கையாக அமைந்து இன்புறுத்துவது போன்று கவிதையில் இயல் பாகவே தோன்றி, கவிதைக்கு அழகையும் கற்பாருக்குக் களிப்பை யும் நல்கும் அணியே சிறப்புடைத்து. மங்கையரிடம் இயல்பாய் அமைந்துள்ள அழகு போன்றும் மாந்தரிடம் உடன் உறையும் குணம் போன்றும் அமைவதே அணி. இயற்கைக்கு உயிரே அழகுதான். கவிதைக்கு உயிர், பொருளாக அமைந்தாலும் கூட உயிர் உணர்வை வெளிக்காட்ட உதவுவது அணி. மக்கள் விளக்கத்திற்காக 'குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் மழலைக் கிளவிக்கு" (சிலம்பு. மனை. 58-59) என்று கண்ணயின் குரல் இனிமையை இனங்கோ உணர்த்துவதை எடுத்துக் கொள்ள லாம். இங்கு, 'குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மழலைச் சொல் கேளாதவர்' (குறள்.66) எனும் வள்ளுவர் உணர் வுடன் அமிழ்தை இணைத்து, அதனைக் குழைத்து அவள் சொல் லுக்கு உவமையாக்குகின்றார். குழலையும் யாழையும் ஓசையால் உணர முடியும். அமிழ்தினைக் கண்டதில்லை. இனிமையின் முதிர்ச்சி என்ற பொருளில் அது பயன்படுத்தப்படுகிறது. இவற் றைக் குழைப்பது என்பதனை மன தால் நினைக்கலாம். இவற்றைக் குழைத்தது போன்ற மழலைச்சொல் எனும் இவ்வுவமையை மட்டும் இங்கு இக்கவிதையிலிருந்து பிரிக்க முடியாது. இவ்வாறு கவிதையோடு இரண்டறக் கலந்து இணைந்து நிற்கும்போது நாமும் அதனுள் கலந்து விடுகிறோம். புலவனும் தன் படைப்பின் பயனைப் பெற்று விடுகின்றான். 2. இலக்கியத்திறன். டாக்டர். மு.வ. பக்.229. 3. அணியறுபது. ஜெகவீரபாண்டியனார், பக் 118.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குவலயானந்தம்.pdf/7&oldid=1498501" இலிருந்து மீள்விக்கப்பட்டது