பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



77. குறுக்கும் நெடுக்கும்

நான்கு சம எண்ணிக்கையுள்ள குழுவினராக, முதலில் ஆட்டக்காரர்களைப் பிரித்தல் வேண்டும்.

குறிக்கப்பட்டிருக்கும் நேர்க்கோட்டில், நான்கு குழுவும் நான்கடி இடைவெளிவிட்டு, நிற்கவேண்டும்.

1 2 3 4

ஒவ்வொரு குழுவினரும், நேர்வரிசையில் முன்பின்னாக (முதலில் நிற்பவர் முதுகைப் பார்த்தபடி) 2 அடி இடைவெளிவிட்டு நிற்கவேண்டும்.

அந்தக் குழுக்களுக்கு முன்புறத்தில் 15 அடி தூரத்தில் ஒரு எல்லைக்கோடு இழுத்து குறிக்கப் பட்டிருக்க வேண்டும்.

ஆடும் முறை:

போட்டியைத் துவக்கியவுடன், கடைசி ஆட்டக்காரர் தான் குழுவில் நிற்பவரின் (ஒருவருக்கொருவர்) இடையிலே விழுகின்ற சந்தில், குறுக்கும் நெடுக்குமாக