பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

101


ஓடி, எல்லைக்குச் சென்று, ஒரு சுற்று சுற்றிவிட்டு, மீண்டும் அதேபோல் ஒருவரிடை ஒருவர் விழும் சந்தில் நுழைந்து வந்து தன் பழைய இடத்தில் வந்து உட்கார்ந்து விடவேண்டும்.

உடனே, அவருக்கு முன்னே நின்றுகொண்டிருப்பவர் முன்னால் அவர் ஓடியது போலவே ஒடத் தொடங்கிக் குறுக்கும் நெடுக்குமாக ஓடி எல்லையை அடைந்து திரும்பி வந்து சந்தில் நுழைந்து தன் இடத்திற்கு வந்து உட்கார வேண்டும்.

இவ்வாறு எல்லோரும் ஓடிய பிறகு, முதலாம் ஆட்டக்காரரும் அப்படியே முன்னால் முடிவெல்லைக் கோட்டை அடைந்து, திரும்பி வந்து, தன் குழுவினரிடையே குறுக்கும் நெடுக்குமாக ஓடி, அந்த் முறையில் திரும்பி வந்து தன் இடத்தில் அமர்ந்து விடவேண்டும்.

முதலில் ஓடி முடித்து உட்காருகின்ற குழுவே வெற்றி பெறும்.


78. நண்டு ஓட்டம்

ஆட்டக்காரர்களை இரண்டு இரண்டு பேராகப் பிரிக்க வேண்டும்.

ஒட்டப் போட்டிக்காக, ஒடத்தொடங்கும் கோடு ஒன்றைப் போட்டிருக்க வேண்டும்.

போட்டியில் கலந்துகொள்ள வரும் அந்த இரட்டையர் இருவரும் முதுகுப்புறமாக, முதுகோடு முதுகு இணைவது போல நின்று, கைகளால்