பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பின்புறமாகக் கோர்த்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். (அதாவது ஒருவரின் இடதுகையும் மற்றவர் வலக்கையும் சேர்வதுபோல).

இவ்வாறு அவர்கள் இணைந்த வண்ணம், ஒடத் தொடங்கும் கோட்டின் முன் நிற்கவேண்டும்.

‘ஒடுங்கள்’ என்று ஆணை கிடைத்தவுடன், இருவரும் சேர்ந்தாற்போல, எதிரே உள்ள முடி வெல்லைக் கோட்டைத் தாண்டி ஓடி முடிக்கவேண்டும். முதலில் ஓடி வருபவரே வெற்றியடைகின்றார்.

குறிப்பு: ஒருவராக இருந்தால் முன்புறமாகப் பார்த்தே ஓட வேண்டும். இவர்கள் இருவரும் முதுகுப்புறமாக இணைந்திருப்பதால், (பக்கவாட்டில் தான் முகம் இருக்கும்) பக்கவாட்டில் இருந்தே முன்புறமாக முன்னோக்கி இயங்கி ஓடவேண்டும்.

எக் காரணத்தை முன் னிட்டும் அவர்கள் பிரியக்கூடாது. பிரிந்து விட்டால் போட்டியை விட்டு உடனே அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.


79. ஆள் தாண்டி ஒடும் போட்டி
(பச்சைக் குதிரை)

சம எண்ணிக்கையுள்ள நான்கு குழுக்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஓடத் தொடங்கும் கோடு ஒன்றைக் குறித்து, அதன்மேல் அவர்களை நான்கு வரிசையாக நிறுத்தி வைத்திருக்கவேண்டும். (ஆட்டம் 77ல் உள்ளது போல்)