பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

25


நிமிர்ந்தும், ஒதுங்கியும், பதுங்கியும், நெளிந்தும், வளைந்தும், தன் வீரரைப் பாதுகாக்க வேண்டும்.

பந்து தன்மேல் பட்ட குதிரை வீரர் தன் குதிரையுடன் வட்டத்தை விட்டு வெளியேறி விடுவதுடன், ஆட்டத்திலிருந்தும் வெளியேற்றப் படுவார். மீதியுள்ளவர்கள் இப்படியே பந்தை எடுத்து ஆட, மீண்டும் முன்போல ஆட்டம் தொடங்கும்.

கீழே கிடக்கும் பந்தை, குதிரையாகப் பணியாற்றுபவரே, தன்மேல் உள்ள வீரருக்கு எடுத்துத் தரவேண்டும். கீழே குனியும்போது, வீரர் கீழே விழுந்தாலும், வட்டத்திற்கு வெளியே குதிரை போய்விட்டாலும் இருவருமே ஆடுவதிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

பந்தை எடுத்தக் குழு, உடனே அந்த் இடத்திலேயே நின்றுவிடவேண்டும். அங்கிருந்து தான், பந்தை விட்டெறிய வேண்டும். படாது வெளியே போனால், வட்டத்திற்கு வெளியே உள்ளவர்களில் யாராவது ஒருவர் பந்தை எடுத்து அருகில் உள்ளவருக்குத் தரலாம், சுமைதாங்கிக் குதிரையாக இருப்பவர் களைத்துப் போனால், அவர்களுக்குள்ளேயே இடம் மாற்றிக் கொள்ளலாம்.

இறுதியாக எந்தக் குழு வீரர்கள் பந்தினால் அடிபடாமல் இருக்கிறார்களோ, அவர்களே வெற்றி வீரர்களாகின்றனர்.