பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பந்தைத் தங்களுக்குள் வழங்கலாம். ஆனால் பந்தை எடுத்துக்கொண்டு ஓடக்கூடாது.

பந்தைப் பிடித்த உடனேயே, தன் குழுவினருக்கு வழங்கிவிட வேண்டும். பந்தைப் பிடித்துக் கொண்டு நடப்பதோ, ஓடுவதோ, தரையில் தட்டுவதோ கூடாது.

எதிர்க்குழுவினர் பந்தைத் தடுக்கலாம். கையிலே வைத்திருந்தால், பிடுங்கவும் முயற்சிக்கலாம். ஆனால் குத்த முயற்சிக்கக் கூடாது.

ஒரு குறிப்பிட்ட கால வரையரைக்குள் யார் அதிக வெற்றி எண்களை எடுக்கிறாரோ, அக் குழுவினரே வெற்றி பெற்றவராவார்.

19. பிடியுங்கள் பார்ப்போம்

அமைப்பு:

எல்லோரும். வட்டமாக நின்று கொண்டிருக்க வேண்டும். நடுவில் ஒருவர் பந்துடன் நிற்க வேண்டும்.

ஆடும் முறை:

எல்லோரையும் தயாரா என்று கேட்டு, தயாராக இருக்கும்படி கூறிவிட்டு, பந்தைத் தலைக்கு மேலே உயரமாக (அதிகமான உயரம் அல்ல, சுமார் 10 அல்லது 11 அடி உயரம் போதும்) தூக்கி எறிந்துவிட்டு, பிடியுங்கள் பார்ப்போம் என்று கூறிவிட்டு, அவர் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.