பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

37


பந்து தலைக்கு மேலே சென்றதும், வட்டத்தில் நிற்பவர்கள் அனைவரும் பந்துக்காகத் தாவி, பிடிக்க முயல வேண்டும்.

பந்தை யார் பிடிக்கிறாரோ, அவருக்கு வெற்றி எண் (Point) உண்டு. இவ்வாறு யார் முதலில் 10 வெற்றி எண்களைப்பெறுகின்றாரோ. அவரே வெற்றி வீரராகின்றார்.

மீண்டும், நடுவிலிருந்து பந்தை உயர்த்தும் பொறுப்பை வெற்றி வீரர் ஏற்றுக் கொள்ள, ஆட்டம் மீண்டும் தொடரும்.

குறிப்பு:

யார் கையிலும் பந்து படாமல் கீழே விழுந்து விட்டால் யாருக்கும் வெற்றி எண் கிடைக்காது மீண்டும் முன் போலவே ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

பந்தைப் பிடித்திருப்பவரையோ பிடித்து வைத்திருக்கும்பொழுதோ வேண்டுமென்றே தட்டிவிட்டால், பிடித்திருக்கிறவருக்கே வெற்றி எண் கிடைக்கும்.

20. எங்கே உருட்டு

அமைப்பு:

வட்டமாக எல்லோரும் நிற்க வேண்டும். ஆனால், இந்த ஆட்டத்தில் சிறிது மாற்றம் உண்டு. எல்லோரும் கால்களை அகலமாக விரித்து வைத்தவாறு நிற்க வேண்டும்.

வட்டத்தின் மத்தியிலே ஒருவர் பந்துடன் வந்து நிற்க வேண்டும்.