பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


குறிப்பு:

எல்லோரும் ஓடி விரட்டிப் பிடிக்க முயற்சித்தால் தான் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும், நமக்கென்ன என்று யாரும் ஒதுங்கி நிற்கவோ ஒய்ந்து போகவோ கூடாது. பொம்மை வைத்திருப்பவர்களும் அடிக்கடி பொம்மையை மாற்றிக்கொண்டே இருப்பது நன்றாக ஆட்டம் அமைவதற்குரிய வழி வகுக்கும்.

30. தொட்டால் விரட்டி

அமைப்பு:

முன் ஆட்டம் போலவே, குறிப்பிட்ட ஓர் பரந்த எல்லை ஆடுகளத்திற்கு உண்டு. -

எல்லோரும் அவரவர் விருப்பம் போலவே ஆடுகளத்திற்குள் நின்றுகொண்டிருக்க விரட்டு வதற்கும் விரட்டப்படுவதற்கும் என்று விளையாட்டைத் தொடங்கி வைக்க, இருவர் ஆங்காங்கே சிறிது இடைவெளி தூரத்தில் நின்றிருக்க வேண்டும்.

ஆடும் முறை:

ஆடுதற்குரிய சைகை கிடைத்ததும், விரட்டுபவர் ஓடுபவரைத் துரத்த வேண்டும். துரத்தப்படுகின்றவர் தனக்கு ஓடும் சக்தியுள்ளவரை ஓடலாம். முடியாதபொழுது, என்ன செய்ய வேண்டும் என்றால் அருகிலே யார் நிற்கின்றாரோ, அவரைத் தொட்டு விட்டு தான் நின்று கொள்ளலாம்.