பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

கெடிலக்கரை நாகரிகம்


வசதி பெறுகின்றன. கெடிலத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மொத்தம் ஐந்து அணைகளாலும் ஏறக்குறைய 10,000 ஏக்கர் நிலங்கள் பயன் அடைகின்றன. உலக ஆறுகளை நோக்கிக் கெடிலம் ஆற்றால் பயன்பெறும் நிலப்பகுதி அளவில் சிறியதாயினும், அப்பகுதி, ஐரோப்பாவின் மகிழ்விடம் (இன்பபுரி) ஆகிய அளவில் சிறிய சுவிட்சர்லாந்து போன்றதாகும்.

இவ்வணைகளேயன்றி, திருநாவலூர் - சேந்தமங்கலம் பகுதியில் கெடிலத்தில் ஒர் அணை கட்டவேண்டும் என்னும் ஒரு திட்டம் நெடுநாளாய்ப் பேச்சளவில் இருந்து வருவதாகத் தெரிகிறது. இஃது ஒருநாள் நிறைவேறலாம்.

பாசன முறை (ஆறு)

அணையின்மேல் புறத்தில் பெரிய வாய்க்கால் வெட்டப்பட்டிருக்கிறது. அந்த வாய்க்காலின் வழியாகச் சுற்று வட்டாரப் பகுதிகள் பயனுறுகின்றன. பெரிய வாய்க்காலிலிருந்து சிறிய வாய்க்கால்கள், அவற்றிலிருந்து இன்னும் சிறிய கால்வாய்கள், அவற்றிலிருந்து ஒற்றையடிப் பாதை போன்ற சிறுசிறு கால்கள் - இப்படியாகப் பிரிந்து நீர் ஒடுவதால் நிலங்கள் நேரடிப் பயன்பெறுகின்றன. சிறிது மேடான இடங்களில், வாய்க்கால்களிலிருந்து ஏற்றம் இறைத்து நீர் பாய்ச்சப்படும். பள்ளமான இடங்களில் ஏற்றம் தேவைப்படாமல் சிறுசிறு கால்களின் வாயிலாகத் தானாகவே நீர் பாயும்; ஒருவர் மண்வெட்டியால் மடை மாற்றிவிட்டுக் கொண்டிருப்பார்; அவ்வளவுதான்! இந்தப் பகுதி நிலங்கள் மிகவும் உயர்ந்தனவாக மதிக்கப்படும். மற்றும், அணையில்லாத சில பகுதிகளிலும் ஆற்றிலிருந்து வாய்க்கால் வெட்டி நீர்ப்பாசனம் செய்கின்றனர்.

கொண்டம் போடுதல்

மேடான இடங்களில் வாய்க்கால்களில் ஏற்றம் போட்டு இறைப்பதுதான் வழக்கம். அங்கேயும் சில வேளைகளில், ஏற்றம் இறைக்காமலேயே நீர் பாய்ச்சுவதற்கு ஒரு முறை கையாளப்படுகிறது. அஃதாவது: உழவர்கள் பலர் ஒன்று திரண்டு ஒரு நாள் மாலையில், குறிப்பிட்ட ஒரிடத்தில் வாய்க்காலின் குறுக்கே ‘செயற்கை அணை’ கட்டுவார்கள், அஃதாவது, வாய்க்காலின் குறுக்கே கம்பங்களை நட்டு; கம்பங்களுக்கிடையே குறுக்குக் கழிகளைக் கட்டி அவ்விடத்தில் தழைக்கட்டு, வைக்கோல் கட்டு, மணல் முதலானவற்றைப் போட்டு உயரமாக நிரப்பி வாய்க்காலை அடைப்பார்கள். அந்தச் செயற்கை அணைக்குக் கீழ்ப்புறம் தண்ணிர் போகாமல் மேல்புறமே தேங்கிக் கரைக்கு மேல் வழிந்து நிலத்திற்குப் பாயும். இதற்குக் ‘கொண்டம் போடுதல்’ என்று