பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


    ஜோசப் அமெரிக்க அரசியலில் பெரிய பதவி க ளை வகித்தார் ; ஜான் அ மெ ரி க் க நாட்டுத் தலைவராகவே ஆகிவிட்டார். 
    கா ல் பந்தாட்டத்திலும், க ழி ப் பந்தாட்டத்திலும் (base ball) ஜோசப் வல்லவர் ; ஜானுக்கு இவ்விரண்டிலும் நல்ல ஈடுபாடு உண்டு. தம்முடைய முதுகெலும்பை முறித் துக்கொள்ளும் அளவுக்குக் கா ல் பந்தாட்டத்தில் இ வ ர் பித்துடையவராக இருந்தார்.
    ஜான் இளமையில் பல பள்ளிகளில் கல்வி பயின்றார். பு ரூ க் ளி ன் என்ற இடத்திலுள்ள துவக்கப் பள்ளியிலும், நியூயார்க்கிற்கு அருகிலுள்ள ரி வ ர் டே ல் பள்ளியிலும், க்னெக்டிக்கட் நகரிலுள்ள காண்ட்டர்பரி பள்ளியிலும் ஜான் தமது இளமைக் கல்வியை முடித்துக் கொண்டார். பிறகு சோ ட் பள்ளியில் உயர் படிப்புக்காகச் சேர்ந்து தமது ப தி னெ ட் டாம் வயதில் பட்டம் பெற்றார். இறுதியில் ஹார்வார்டு கல்லூரியில் ஆராய்ச்சிக் கல்வியும் பயின்றார், இன்று அமெரிக்க அரசியலில் சிறப்பான இடத்தைப் பெற் றுள்ள அட்லாய் ஸ்டீவென்சனும், செஸ்டர் பெளல்கம் சோட் பள்ளியில் ஜானுடன் பயின்ற மாணவர்களே.
    ஜான், பள்ளியில் பயின்றபோது ஒற்றைநாடி உடம் புக்காரர். இவரை ஆசிரியர் எல்லாரும் நன்கு நினைவில் வைத்திருக்கின்றனர். அடக்கமும், பண்பும் உள்ளவராக ஜான் விளங்கினார் என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்ற னர். இவருடன் பயின்ற மாணவர்கள் இவரைப்பற்றிச் சுவையான ஒரு செய்தி குறிப்பிடுகின்றனர். குறிப்பிட்ட ஒரு சில பொருள்களை மட்டும் இவர் மறந்து விடுவாராம்.
    " கடிதப் போக்குவரத்து, உரையாடல், வரலாற்று நிகழ்ச்சிகள் முதலியவை ஜானுக்குப் படம் பிடித்தாற்போல் நினைவிருக்கும் ; ஆனால் சொற்பொழிவு நகல்கள், நூல்கள், துணிமணிகள் ஆகியவற்றை எங்கே வைத்தோம் என்பதை