பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


அறிக்கை கூறியது. பி ட் ஸ் தாத்தாவால், உள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடனே மேசையின் மீது ஏறி ஓர் ஐரிஷ் நட்னம் ஆடிக் காண்பித்தார் அம்முதுகிழவர்.

இருபத்தொன்பது வயது கூட நி ர ம் பா த ஓர் இளைஞர் தேர்தலில் வெற்றி பெற்றது மற்ற உறுப்பினர் களுக்குப் பெரிதும் மானக்கேடாகி விட்டது. கென்னடியின் தந்தை ஏதோ திரை மறைவிலிருந்து கொண்டு சூழ்ச்சி செய்து விட்டார் என்று பேசினர். ப ண த் ைத வாரி இறைத்துச் செலவு செய்தார் என்றும், பத்திரிகைகளில் அளவுக்கு மீறி விளம்பரம் செய்தார் என்றும் ஜான் மீது குற்றம் சாட்டினர். ஆனல் உண்மையில் ஜான் வெற்றி பெற்றதற்குக் காரணம், அவருடைய அயரா உழைப்பும், நண்பர்களின் ஒத்துழைப்புமே ஆகும்.

Ο Ο Ο