பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


வெட்டிவ்கள் ஆகிய எல்லாரையும் கண்டு நேரில் பேசி ஆதரவு திரட்டினர். தம்முடைய மூதாதையர் வாழ்ந்த பாஸ்டன் நகரிலிருந்து இளைஞர்கள், விருவிருப்பானவர்கள், அரசியல் பட்டறிவில்லாதவர்கள், நிச்சயமான கொள்கைத் தெளிவில்லாதவர்கள் ஆகியவர்களை ெய ல் லா ம் ஒன்று திரட்டி இளந்தலைவர் படை என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினர். பிறகு அவர்களுக்குப் பயிற்சியும் ஊக்கமும் அளித்து அரசியலில் ஒரு பி டி ப் ைப உண்டாக்கினர். பாஸ்டனில் மிகவும் செல்வாக்கு பெற்றிருந்த தமது பிட்ஸ் தாத்தாவையும் பாட்டியையும் தேர்தல் பணிக்குப் பயன் படுத்தி கொண்டார்.

அத்தொகுதியில் உள்ள எண்ணற்ற தெருக்களில் புயல்வேகத்தில் ஜான் சுற்றித் திரிந்தார் ; சிகையலங் கரிக்கும் நிலையங்கள், தொழிற்சாலைகள், கப்பல் கிடங்குகள் ஆகிய இடங்களுக்கெல்லாம் ஒ டு வார் ; எல்லாரிடமும் நேரில் பேசுவார் ; அடிக்கடி தேர்தல் கூட்டங்களிலும் கலந்து கொள்வார். முதலில் அவருடைய தேர்தல் பேச்சுக் களில் சற்றுத் தயக்கமும் நடுக்கமும் காணப்பட்டன. அவருடைய பேச்சுக்கள் நேரடியானவையாகவும், எளிமை யுடையவையாகவும், அலங்காரமோ, அடுக்குச் சொற்களோ மிகைப்படுத்தலோ இல்லாதவையாகவும் விளங்கின. பழங் கால அரசியல்வாதிகளின் பேச்சுக்களுக்கு நேர்மாருனதாக அவர் பேச்சு விளங்கியது. வெளிப்படையாக எதையும் கூறும் அவர் போக்கை மக்கள் விரும்பினர்.

தம்முடைய தொகுதியிலிருந்த கணக்கற்ற வாக் காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஜான் பேசிஞர் ; தம் இளந்தலைவர் படையைப் பல கூறுகளாக்கி வாக்காளர் களே நேரில் கண்டு பேச அனுப்பினர். தேர்தல் நாளும் வந்துவிட்டது. ஜான் மிகவும் மகிழ்ச்சியோடு காணப்பட் டார். .ே த ர் த ல் முடிவு தெரிவதற்கு முன்பாகத் தமது தாத்தாவோடும் பாட்டியோடும் திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றிருந்தார். ஜான் வெற்றி பெற்றுவிட்டதாகத் தேர்தல்