பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


அணிகளோ, அலங்காரப் பொருள்களோ ஜாக்குலினுக்குப் பரிசளிக்கமாட்டார். சிறந்த வரலாற்று நூல்களேயே பரிசாகக் கொடுப்பார். ஜாக்குலின் தான் வரைந்த ஓவியங்களைப் பரிசாகக் கொடுப்பாள். இரண்டாண்டுகள் இவ்வாறு பழகிய பிறகே என்னை மணந்து கொள்கிருயா?' என்று கென்னடி ஜாக்குலினிடம் கேட்டார். ஜாக்குலினும் அன்போடு ஒப்புக் கொண்டாள்.

இதற்குள் பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் வந்து விட்டது. கென்னடி ஜாக்குலினை மறந்து விட்டு முழுமூச் சாகத் தேர்தலில் இ ற ங் கி வி ட் டார் . பல திங்கள்கள் ஜாக்குலினைச் சந்திக்கும் எண்ணமே கென்னடிக்கு ஏற்பட வில்லை. தேர்தலில் வெற்றிபெற்ற பிறகே அவர் திருமணத் தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். 1953 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 12 ஆம் நாள் மேல் சபை உறுப்பினர் ஜான் பிட் ஜெரால்டு கென்னடிக்கும் குமாரி ஜாக்குலின் லீ பொவியருக்கும் கியூ போர்டில் மரியன் னே பேரால் அமைந்த ரோமன் கத்தோலிக்கக் கோவிலில் திருமணம் மிகவும் சிறப் பாக நடைபெற்றது. கென்னடியின் குடும்பத்தினருக்குப் பலகாலம் நண்பராகவும் வேண்டியவராகவும் இருந்த பூஜ்யர் ரிச்சர்ட் ஜே. குஷிங் திருமணத்தை நடத்தி வைத்தார். போப் பாண்டவர் மணமக்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி யிருந்தார்.

திருமணம் நடந்தபின் கென்னடியின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிக் குரியதாக இருந்தது. அரசியல் வாழ்வில் அவர் அடைந்திருந்த வெற்றியும், அழகியான ஜாக்குலினை மனைவியாகப் பெற்ற வெற்றியும் அவர் உள்ளத்தில் பேருவ கையை உண்டாக்கின. சில திங்கள்கள் இவ்வாறு கழிந்தன. கென்னடி மீண்டும் அரசியலுக்குச் சென்றுவிட்டார்.